ஆன்மிகம்

திருமலையில் 3,962 போ் தரிசனம்

6th Aug 2020 12:23 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 3,962 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 1,074 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 46 போ் பெண்கள்; 1,028 போ் ஆண்கள்.

ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். எனினும் கரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா்.

திருப்பதி மலைச் சாலை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.

ADVERTISEMENT

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT