ஆன்மிகம்

இந்த வாரம் (ஏப்ரல் 10-16) எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது?

13th Apr 2020 06:14 PM

ADVERTISEMENT

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 10 - ஏப்ரல் 16) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். ஆனாலும் சேமிப்புக்கு வழி இருக்காது. தொழிலில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்க சற்று தாமதமாகும். மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகள் உழைப்புக்குத் தகுந்த வருமானத்தைக் காண்பீர்கள். கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். விவசாயிகள் விளைச்சலில் மிகுந்த கவனம் செலுத்தவும். கால்நடைகள் மூலம் குறைந்த பலன் கிடைக்கும்.

ADVERTISEMENT

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். சிலருக்கு மேலிடத்திலிருந்து பாராட்டுகள் கிடைக்கும். கலைத்துறையினர் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். வேலைகளில் மட்டுமே குறியாக இருக்கவும். பெண்மணிகள் ஆன்மிகத்தில் நாட்டம் மேலோங்கும். உறவினர்களுடன் சுமுகமாக பழகுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவமாணவிகள் விளையாட்டில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டு படிப்பில் அக்கறை காட்டவும்.

பரிகாரம்: கணபதியை அருகம்புல் வைத்து வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 10, 13. சந்திராஷ்டமம்: 11, 12.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் சற்று ஏற்றம் இறக்கமாகவே இருக்கும். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் மந்தமாக நடந்துவந்த காரியங்கள் சுறுசுறுப்பாகும்.

உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். மேலதிகாரிகளினால் சில சங்கடங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் லாபம் சுமாராகவே வரும். புதிய முதலீடு செய்ய யோசித்து முடிவெடுக்கவும். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளும் பெறுவீர்கள். கால்நடைகளாலும் பால் வியாபாரத்தாலும் வருமானம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் கோரிக்கைகளை மேலிடத்தில் கேட்பார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏதும் வராது. இருக்கும் கையிருப்பை சிக்கனமாக கையாளவும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கையிருப்பை சிக்கனமாக கையாளவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். 

பரிகாரம்: குருவாயூரப்பனை மனதார பிரார்த்திக்கவும். அனுகூலமான தினங்கள்: 11, 16. சந்திராஷ்டமம்: 13, 14.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எண்ணங்கள் சற்று நிதானமாகவே ஈடேறும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சகோதரி வழியில் நன்மைகள் ஏற்படும். பெயரும் புகழும் படிப்படியாக உயரும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வை பெற சற்று தாமதம் ஆகும். சிலர் அலுவலக ரீதியாக வெளியூர் செல்ல நேரிடும். வியாபாரிகள் புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுப்பது கூடாது. விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டுவர். தானிய விற்பனை லாபகரமாக இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படும். உட்கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டாம். கலைத்துறையினர் சில சிரமங்களுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் சற்று சிரமத்துடனேயே சுப நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஆடம்பரச் செலவைத் தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு அறிவியல் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்பாக இருக்கவும்.

பரிகாரம்: அஷ்டமி தினத்தில் காலபைரவரை வணங்கி வர நன்மைகள் கூடும். அனுகூலமான தினங்கள்: 12, 13. சந்திராஷ்டமம்: 15, 16.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தடைகள் விலகும். யோக பாக்கியங்கள் அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு வராது என்றாலும் பழைய கடன்களைச் செலுத்தி விடுவீர்கள். பூர்வீகச் சொத்துகள் வகையில் இருந்த தடைகள் சற்று விலகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவார்கள். விவசாயிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியடைவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள். சுப காரியங்களுக்கு செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் நல்ல திருப்பங்கள் காண்பார்கள். இருப்பினும் வாயைக்கொடுத்து பிரச்னைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். 
கலைத்துறையினர் ஒருமித்த மனதுடன் பணியாற்றவும். வேலையில் மட்டுமே குறியாக இருக்கவும். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். விரும்பிய பாடத்தைப் படித்து முன்னேறுங்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தையும் மகான்களையும் வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 11, 14. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

காரியங்களை நிறைவேற்ற மிகுந்த சிரமம் ஏற்படும். மன உறுதியுடன் செயல்களைச் செய்வீர்கள். விரயங்கள் உண்டாகும் என்றாலும் கடன் தொல்லை ஏற்படாது. தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். பிராணாயாமம் செய்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும். மேலதிகாரிகள் சமயோசித புத்தியைப் பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு அலைச்சலும் டென்ஷனும் நீங்கும். வருமானம் கூடத்தொடங்கும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவதில் சற்று சிரமம் ஏற்படும். மகசூல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரம் குறித்து மேலதிகாரிகளுடன்ஆலோசனை செய்வீர்கள். தொண்டர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். சேமிப்புகளில் மிகுந்த அக்கறை தேவை. மாணவமணிகள் நினைத்த மதிப்பெண்களைப் பெற முயற்சி செய்வீர்கள். ஓய்வு நேரங்களில் நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கவும். 

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 12, 14. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

நடக்காது என்று நினைத்திருந்த விஷயங்கள் நடக்கும். வழக்குகள் இழுப்பறியாகத்தான் இருக்கும். மனதிற்குப் பிடிக்காத சில கசப்பான விஷயங்களும் வந்து சேரும். உடல் நலத்திலும் அக்கறை தேவை. பொருளாதார நிலைமை சற்று மந்தமாகவே இருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். கடமைகளைச் சரியாகவே செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளின் முயற்சிகள் அளவுக்கு ஏற்பவே லாபம் கிடைக்கும். புதிய கடன்களை வாங்க நேரிடலாம். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சலின் அளவு குறைவாகவே காணப்படும். கால்நடைகளால் லாபம் குறையும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் குறைகள் தோன்றும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபத்தைக் குறைத்து செயலாற்றவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து முடித்தாலும் பணவரவு தாமதமாகும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலைமை தென்படும். மாணவமணிகள் நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்காமல் கல்வியில் ஆசிரியரின் வழிகாட்டுதல் படி நடந்துகொள்ளவும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர நலன்கள் கூடும். அனுகூலமான தினங்கள்: 14, 15. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வாழ்க்கையில்  சிறு சலிப்புகள் ஏற்பட்டாலும் விரைந்து அதிலிருந்து விடுபடுவீர்கள். துணிந்து செய்யும் செயல்கள் வீண் போகாது. பொருளாதாரத்தில் சற்று மந்தமான நிலையை காண்பார்கள். எல்லா தேவைகளும் பூர்த்தியாக சாத்தியமில்லை.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சற்று சிரமம் ஏற்படும். சக ஊழியர்களிடம் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் சாதுர்யத்துடன் செயல்பட்டு பிரச்னைகளில் தீர்வு காணலாம். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வருமானத்திற்கு குறைவு உண்டாகாது.

அரசியல்வாதிகளைத் தேடி புதிய பதவிகள் வருவதில் சற்று சிரமம் ஏற்படும். எதிர்கட்சியினரும் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏதும் வராது. கையிருப்புகளைப் பத்திரப்படுத்தவும். பெண்மணிகள் குடும்பப் பொறுப்புகளை சரியாக முடிப்பீர்கள். கணவரது உடல்நிலையில் மாற்றம் தெரியும். மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபாடு செய்து வரவும். அனுகூலமான தினங்கள்: 12, 16. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதார நிலைமை சற்று மந்தமாகவே இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி தியானம், பிராணாயாமம் போன்றவற்றை மேற்கொள்ளவும். குடும்பத்தினர் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் சற்று சிரமத்தை ஏற்படுத்தும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை முறையை கையாளவும். 

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். விளைச்சலைப் பெருக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசியல்வாதிகள் வேலைகளை ஒழுங்காகச் செய்வீர்கள். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். 

கலைத் துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைப் பெற காத்திருப்பார்கள். பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் அதிகமாக உழைத்து மதிப்பெண்களை பெற பாடுபடுவீர்கள். உடற்பயிற்கள் மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும்.

பரிகாரம்: பழனி தண்டாயுதபாணியை மனதார வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 10, 15. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் குறைகள் ஏற்பட்டாலும் செலவுகள் சரியான முறையில் முடிவடையும். உங்கள் மதிப்பு உயரும். பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்கவும். எதிலும் எச்சரிக்கையுடன் விழிப்போடு இருக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனமுடன் ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகளால் மேலும் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரிகள் முயற்சிக்கு ஏற்ற லாபத்தைப் பெறுவார்கள். புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். விவசாயிகள் சந்தையில் போட்டிக்கு ஏற்றவாறு விற்பனை செய்து லாபம் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். தொண்டர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் உழைப்புக்குத் தகுந்த பாராட்டுகளைப் பெறுவார்கள். 
பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவார்கள்.  கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவ மணிகளுக்கு உடற்பயிற்சியில் நாட்டம் அதிகரிக்கும். கேளிக்கை, விளையாட்டுகளில் நேரத்தை செலவிடாமல் பெற்றோர் சொற்படி நடக்கவும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 14, 15. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பணப்புழக்கம் தாராளமாக இருக்காது. பெயரும் புகழும் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுக்கும். உடல்நலத்தில் போதிய அக்கறை காட்டுவீர்கள். திறந்த மனத்துடன் காரியங்களைச் செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிலவி வந்த பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்ளவும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு ஏற்ற லாபம் பெருகும். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகாது.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்காது. கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் தேடி வரும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நன்று. கையிருப்பைச் சிக்கனமாக செலவு செய்யவும். மாணவமணிகள் சமுதாய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: பார்வதி- பரமேஸ்வரரை மனதார தியானித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 13, 14.
சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் தாமதமாக நிறைவேறும். பொருளாதாரம் இறக்கமாகவே காணப்படும். உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களுடன் எச்சரிக்கையுடன் பழகவும். அநாவசிய செலவுகளைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். சக ஊழியர்களிடம் கவனமாக பழகவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே காணப்படும். தற்போது வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு கொள்முதல் மந்தமாகவே இருக்கும். கால்நடைகளுக்கான பராமரிப்புச் செலவுகள் கூடும்.

அரசியல்வாதிகளின் செயல்களை கட்சி மேலிடம் பாராட்டும். எதிர்க்கட்சியினருக்கு புத்திசாலித்தனமாக பதிலடி கொடுப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். ரசிகர்களின் அலட்சியத்தையும் பெரிது படுத்த வேண்டாம். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பேசும்போது பேச்சில் கவனம் தேவை. மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள்.

பரிகாரம்: சனியன்று சனீஸ்வரபகவானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 11, 16. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வருமானம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் வேண்டிய பொருள்கள் கிடைத்துவிடும். தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி செயல்களில் வெற்றியடைந்து விடுவீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகுவர்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரித்துச் செல்லவும். அலுவலக வேலைகளில் சுமுகமாக இருக்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நலமாக முடிய கூட்டாளிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைக் காண்பர். விவசாய இடு பொருளுக்கும் பூச்சுகொல்லிகளுக்கும் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

அரசியல்வாதிகள் எதிரிகளின் தொல்லைகள் குறைய உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகளில் நல்ல திருப்பங்கள் காயண்பீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்து, புதிய ஒப்பந்தம் பெறுவீர்கள். பெண்மணிகள் நல்லது, கெட்டது இரண்டையும் சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். கணவரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். 

பரிகாரம்: "நமசிவாய' மந்திரத்தை ஜபித்து சிவபெருமானை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 15, 16. சந்திராஷ்டமம்: 10.

ADVERTISEMENT
ADVERTISEMENT