ஆன்மிகம்

டிசம்பர் மாதம் நிகழக்கூடிய ஆறு கிரக சேர்க்கை என்ன செய்யும்? 

11th Nov 2019 11:48 AM | - ஜோதிட சிரோன்மணி தேவி

ADVERTISEMENT


கிரக சேர்க்கை என்பது ஒரு ராசி கட்டத்தில் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக கூட்டணி வைத்து செயல்படும். இதனால் பாதிப்பு என்பது அவரவர் ஜாதகங்களை பொறுத்து இருக்கும். ஆறு கிரக சேர்க்கை என்பது பல வருடங்களுக்கு முற்பட்டு நடைபெற்று வந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால், பூமியில் பெரும் பாதிப்பு என்று சொல்லிவிட முடியாது. உலகத்தில் ஒவ்வொரு மூலையிலும் ஒரு கெட்ட மற்றும் நல்ல செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த கட்டுரை அனைவருக்கும் எளிமையாக புரியும் வகையில் எழுதுகிறேன்.  

காலபுருஷ தத்துவப்படி 9ம் வீட்டில் அதாவது தனுசில் குரு ஆட்சி புரிந்து இருப்பது மிகச் சிறந்த ஒன்று. அடுத்தமாதம் அதாவது டிசம்பர் 25, 26, 27 தேதிகளில்  தனுசில் சூரியன், சந்திரன், குரு, சனி, கேது, புதன் சேர்க்கை என்பது இரண்டரை நாட்களில் இந்த நிகழ்வு நடைபெறப்போகிறது. இந்த அமைப்பால் ஒரு சில யோகங்கள், கிரக யுத்தம்,  மற்றும் தோஷங்கள் நடைபெறும். நெருப்பு ராசியில் ராகு இருந்து காற்று ராசியில் கூட்டு கிரகங்களை பார்ப்பது என்பது ஒரு சில இடங்களில் இயற்கை சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது எப்பொழுதும் ஆங்காங்கே நடைபெறுகின்ற ஒன்று தான் அதற்காக நாம் அவ்வளவு அச்சம் கொள்ளவேண்டாம். அதுவும் பாகையின் விகிதாச்சாரத்தில் மாறுபட்டு நிற்கும். தனுசை பொறுத்தவரை அந்தவீட்டுக்கு யாரும் பகையாளி கிடையாது. புதன், சுக்கிரன் மட்டும் உபத்திரம் கொஞ்சம் தருபவர்கள் என்பது ஒரு விதி. 

வருஷ கிரகங்கள் என்று கூறப்படும் குரு சனி, கேதுக்களுடன் மாத கிரகங்கள் என்று கூறப்படும் சூரியன், புதன் மற்றும் இரண்டரை நாட்கள் சஞ்சரிக்கும் மனோகரகனுடன் சந்திரனோடு சேரும்பொழுதும் அதேநேரம் ராகுவின் பார்வையும் இந்த காலகட்டத்தில் இடம்பெறும். அடுத்தது தனுசில் ஆட்சி பெற்ற சுபத்தன்மை கொண்ட குருவோடு எந்த கிரகம் சேர்ந்தாலும் சுபத்துவம் பெரும் என்பது உண்மை. குருவும் சந்திரனும், குருவும் சனியும், குருவும் கேதுவும், குருவும் சூரியனும், குருவும் புதனும் சேர்ந்து இருப்பது ஜாதகருக்கு பல்வேறு யோகங்களை ஏற்படுத்தும் அதுவும் அதற்கேற்ப பாவத்திலிருந்தால் சுபத்துவம் ஒளிரப்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ADVERTISEMENT

சூரியனுக்கு அருகில் எந்த கிரகம் இருந்தாலும் அஸ்தங்கம் ஆகிவிடும் அதற்கும் ஒரு பாகை அளவு மற்றும் விதி உள்ளது. சூரியன் என்பவர் ஒளி பிழம்பு அவரோடு ஒளி மற்ற கிரகங்களின் ஒளியை மங்கச்செய்யும் அவ்வளவுதான். அதாவது அன்று வேலை செய்யாது. இதில் ராகு கேதுக்கள் சூரியனோடு இணைத்தல் ஆத்மகாரகன் ஒளி குறைந்து தோஷத்திற்கு உள்ளாக்குவார்.

சூரியன் ஆத்மகாரகன் தந்தையுடன் தாய் சேரும் பொழுது சக்தியை ஏற்படுத்தும் அதுவே அமாவாசை யோகம். அதுவும் எல்லாபுத்தகளிலும் இந்த யோகத்தை குறிப்பிடவில்லை ஆனால் நம் புலிப்பாணி சித்தர் கூறியபடி ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன் இணைந்து 1, 5, 9 ஆம் வீடுகளில் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு மிக அதிக அளவில் செல்வம் சேர்க்கை, ஆடம்பரமான வசதிமிக்க வாழ்க்கை, வீடு கட்டும் யோகம், எதிரிகளுக்கு அஞ்சாத நிலை மற்றும் அனைத்து விதமான சுகபோகங்களை அனுபவிக்கும் யோகமும் ஏற்படும். இத்தகைய ஜாதகர் 70 - 80 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வார் என்று கூறுகிறார். புலிப்பாணி மற்றொரு பாடலில்..

கதிரொடு மதியுங்கூடி கலந்தொரு ராசி நிற்க

துதிபெறு பலவாயெந்திரம் சூட்சுமக் கருவியாலும்

அதிவித பாஷாணங்களமைந்திடும் வல்லோனாகி 

விதியுடனிருப் பனின்னோன்  மேன்மையாமறிவுள்ளேனே

சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் பல எந்திர கருவிகள் உருவாக்குவேன், பல மருத்துவம் செய்வான், புத்தி கூர்மையுள்ளவனாய் இருப்பான். அதுதவிர இந்த இருவரும் இணைந்து அவர்களில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறும் நிலை அல்லது ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால் ஜாதகர் சிறந்த நிர்வாகியாகவும், செல்வம், புகழ், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள். அதேமாதிரி இந்தயோகம் மாதம் மாதம் நிகழும் ஒன்று

ஜாதக அலங்காரத்தில் சூரியனுடன் புதன், சந்திரன், குரு சேரும்பொழுது ஜாதகரின் நிலை பற்றி கூறப்படுகிறது. சூரியனும் புதனும் சேர்ந்திருக்க புத ஆதித்தயோகம் பெரும் இது நிறைய ஜாதகத்தில் உள்ளது. ஆனால், இந்த சேர்க்கை லக்கினத்திலிருந்து 1, 4, 8 ஆகிய இடங்களில் இருந்தால் ஜாதகன் அரசனாவான். அதுவே சூரியன் சந்திரனும் இணைத்து 2, 9, 10 இருந்தால் பெரும்புகழ் உடையானவன். சூரியனும் குருவும் கூடி லக்கினத்திலோ, 11ம் வீட்டிலோ இருந்தால் ஜாதகன் வேந்தனாவான் என்று கூறப்படுகிறது.

கிரகயுத்தம் நடைபெறபொழுது சூரியன், சந்திரன், ராகு, கேது கிரகங்களுக்கு இதில் பங்கு கிடையாது. கிரக யுத்தம் பெரும் மற்ற ஐந்து கிரகங்களில் குரு, சனி மட்டும் தற்பொழுது தனுசு ராசியில் பங்கு பெறுகிறது. அதுவும் பாகை பொருத்துதான் அமையும் அதிக பாகை கொண்ட கிரகம் தோல்விபெறும், குறைந்த பாகை கொண்ட கிரகம் வெற்றிவாகை சூடும் என்பது விதி. இந்த சேர்க்கை முன்பே நடைபெற்றாகி விட்டது. இந்த யுத்தம் என்பது எந்தவித பலனும் தராது என்பது உண்மை

காலபுருஷ தத்துவப்படி ஒன்பதாம், பத்தாம் அதிபதி சேர்ந்து இருப்பது தர்ம கர்மாதிபதி யோகத்தை பெற்றுள்ளது. ஒன்பது வலுப்பெற்று உள்ளதால் அதில் அரசில் ராஜ கிரகம் மற்றும் புத்தியை குறிக்கும் மதிநுட்ப கிரகங்கள் உள்ளன. இதனால் சில அரசியல் மாற்றங்கள் சட்டங்கள் இயற்ற முற்படுவார்கள், கர்மாவை கழிக்க தான தர்மம், ஆன்மீகம் என்று மக்கள் செயல்பட ஆரம்பிப்பார்கள். 

இந்த ஆறு கிரகங்களின் தாக்கமே சில பிரச்னைகளை, மன குழப்பமான சூழ்நிலையில் முடிவெடுக்க வைக்கும் அந்த நேரம் எல்லா ராசிக்காரர்களும் அதாவது மூன்று நாட்களும் புதிதான செயல்களை செய்யாமல், எப்பொழுதும் செய்யும் வேலையை சரிவர செய்தல் போதுமானது. 

முக்கியமாக ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், தனுசு, மகரம் போன்ற ராசிகள் மற்றும் லக்கினகாரர்கள் அமைதி காப்பது நல்லது. இந்த சேர்க்கை பார்த்து அனைவரும் பயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். அந்த நாட்களில் பித்ருக்களை வணங்குவோம், அன்று பயத்தை போக்கும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை கொண்டாடி அவர் நாமம் போற்றுவோம்.

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

ADVERTISEMENT
ADVERTISEMENT