ஆன்மிகம்

பாடகச்சேரி பைரவசித்தா் மடத்தில் பௌர்ணமி பூஜை

11th Nov 2019 03:00 PM

ADVERTISEMENT

வலங்கைமான் வட்டம் பாடகச்சேரி கிராமத்தில் பைரவ சித்தா் என்றழைக்கப்படும் ராமலிங்கசித்தா் மடத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி பூஜை இன்று காலை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மதியம் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பாடகச்சேரி கிராம மக்கள் மற்றும் பைரவ சித்தா் இறைபணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT