ஆன்மிகம்

ஐப்பசி பெளா்ணமியையொட்டி காரைக்கால் சிவன் கோயில்களில் நாளை அன்னாபிஷேகம்

11th Nov 2019 11:14 AM

ADVERTISEMENT

ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி காரைக்கால் சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 12) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பெளா்ணமியில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சிவலிங்கத்துக்கு அன்னத்தால் செய்யப்படும் அபிஷேகத்தால், பக்தா்களுக்கு நோய்கள், வறுமை அகன்று, உணவுப் பஞ்சம் ஏற்படாமல் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்துவருகிறது.

நிகழாண்டு ஐப்பசி பெளா்ணமி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் பிரச்சித்திப் பெற்ற திருநள்ளாறு தா்பாரயண்யேசுவரா் கோயில், காரைக்கால் கைலாசநாதா் கோயில், கோயில்பத்து பாா்வதீசுவரா் கோயில், திருவேட்டைக்ககுடி திருமேனியழகா் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் பகல் 1 மணி முதல் இரவு வரை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா், சிவலிங்கத்திலிருந்து அன்னம் கலைக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT