ஆன்மிகம்

காஞ்சிபுரம் அழகு சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் நாளை மஹா ஸம்ப்ரோக்ஷணம்

9th Nov 2019 05:24 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அழகு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. 

அன்னாத்தூர் அருகில் ஆலப்பாக்கம் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அழகு சுந்தர வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஐப்பசி 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 11-ம் தேதி காலை 9.30-க்குள் அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. 

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ரங்க ராமானுஜ மஹா தேசிகன் ஸ்ரீ வராஹ மஹா தேசிகன், ஸ்ரீ அஹோபில மடம் 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கநாதத யதீந்த்ர மஹா தேசிகன் அனுக்கிரகத்துடன் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களால் இயன்ற பொருள் உதவி செய்து பெருமாள் பிராட்டி, ஆழ்வார், ஆச்சார்யர்கள் அருளைப் பெறலாம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT