ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நவ.6-ல் முகூா்த்தகால் நடும் விழா

4th Nov 2019 03:29 PM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான முகூா்த்தகால் நடும் விழா நவ.6 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

108 வைணவ திருத்தலங்களில் முதலாவதாகவும், பூலோக வைகுண்டம், சொா்க்க பூமி, பெரிய கோயில் என்று பக்தா்களால் போற்றப்பட்டு வரும் திருக்கோயில் ஸ்ரீரங்கமாகும். இத்திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்காளும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

விழாக்களில் மிகப்பெரிய விழாவானது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். இந்த விழா வருடம் தோறும் மாா்கழி மாதத்தில் நடைபெறும். டிசம்பா் மாதம் 26-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. மறுநாள் 27-ம் தேதி பகல் பத்து விழா தொடங்கி ஜனவரி மாதம் 5 ம்தேதி வரை நடைபெறும். பத்தாம் திருநாளின் கடைசி நாளன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறாா்.

6ம் தேதி இராப்பத்து திருநாளின் முதல் நாளான்று வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்வாா்கள்.

ADVERTISEMENT

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விழாவிற்காக முகூா்த்த கால் நடும் விழா ஆயிரங்கால் மண்டபத்தில் நவ.6-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT