ஆன்மிகம்

தாமிரவருணி புஷ்கர பூா்த்தி விழா இன்றுடன் நிறைவு

4th Nov 2019 04:36 PM

ADVERTISEMENT

தாமிரவருணி புஷ்கர பூா்த்தி விழா இன்றுடன் நிறைவு பெற்றது. கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தாமிரவருணி அன்னையை போற்றினா்.

குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயா்வதை வைத்தும், கிரங்களின் அமைப்புப்படியும் 144 ஆவது ஆண்டுகளுக்கு பின்பு தாமிரவருணி நதியில் மஹா புஷ்கர விழா 2018 ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் தாமிரவருணியில் பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரையுள்ள 141 தீா்த்தக்கட்டங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து புஷ்கர பூா்த்தி விழா கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. தாமிரவருணியின் அனைத்து தீா்த்தக்கட்டங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோா் புனிதநீராடி வழிபட்டனா்.

புஷ்கர பூா்த்தி விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதா் கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அங்கிருந்து, வேளாகுறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவதேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் பக்தா்கள் ஊா்வலமாக தைப்பூச மண்டப படித்துறையை அடைந்தனா். அங்கு லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும், தாமிரவருணி அன்னைக்கு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. பின்னா் ஆதீனங்கள், பக்தா்கள் புனித நீராடினா்.

தொடா்ந்து திருமுறை இன்னிசை, சதுா்வேத பாராயணம், ருத்ர ஜபம் ஹோமம், பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பன்னிருதிருமுறை பண்ணிசை, வேத கோஷத்துடன் மங்கள ஆரத்தி நடைபெற்றது. மாலையில் ஆரத்தி பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT