மயூரவாகன சேவன விழா 96-ம் ஆண்டு விழாவாக இன்று சென்னை, திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி நிலையத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் (1850-1929) முருகப்பெருமானைப் பலமுறைக் கனவிலும், நினைவிலும் தரிசித்த அருளாளர்.
1924-ம் ஆண்டில் முருகப்பெருமான் திருவருளால் பாம்பன் சுவாமிகள் காக்கப்பட்ட அற்புத தெய்வீக நிகழ்ச்சி மயூர வாகன சேவனமாகும்.
சென்னை, அரசாங்க மருத்துவமனையில் (govt. general hospital) நடந்த இந்த நிகழ்ச்சியின் விவரம் இம்மருத்துவமனையின் 11-ம் வார்டின் (மன்றோ வார்டு) உட்புற சுவரின் பதிவுக் கல்வெட்டில் 5 பிரபல மருத்துவர்கள் பெயர்களுடன் இன்றும் உள்ளது. பாம்பன் சுவாமிகள் திருவுருவப்படம் அங்கே அருகில் உள்ளது.
இந்த அற்புத தெய்வீக நிகழ்ச்சியின் 96-வது ஆண்டு விழா 26.12.19(இன்று) சுவாமிகள் சமாதி நிலையத்தில் நடத்தப்படுகிறது.
அடியார்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு பாம்பன் சுவாமியின் அருளை பெறுவோம்.