அமாவாசையை முன்னிட்டு மேல்மலையானூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் மார்கழி மாத அமாவாசையான நேற்று இரவு 12 மணியளவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து, ஊஞ்சல் உற்சவத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.