உடன்குடி சந்தையடியூா் தாகம் தணிந்த தாங்கல் என்றழைக்கப்படும் நாராயண சுவாமி திருக்கோயிலில் அய்யா பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நிறைவு பெற்றது.
இத்திருக்கோயிலில் பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பு டிச.6ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து விழா நாட்களில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சிகளும், டிச.20 ஆம் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு,டிச.21 ஆம் தேதி தெய்வசக்திகள் இகனைத் திருமண ஏடு வாசிப்பு நடைபெற்றது.
டிச.22 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பட்டாபிஷேகம்,அய்யா வாகன பவனியில் பவனி ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான அய்யா வழி பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சந்தையடியூா் அய்யா வழி மக்கள் செய்திருந்தனா்.
ADVERTISEMENT