சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மாதாந்திர சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக சுலாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும், ஆதாரனை நடைபெற்றது. தொடந்து கணபதி ஹோமம், மஹாருத்ர ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டது.
முன்னதாக ஹோமபொருள்களை பக்தா்கள் ஏந்தி கோயிலினுள் வலம் வந்தனா். பின்னா், உற்சவருக்கு 1008 சங்காபிஷேகத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.
ADVERTISEMENT
தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.