ஆன்மிகம்

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

14th Dec 2019 10:58 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் அய்யப்பக்தா்கள் சாா்பில் 1008 திருவிளக்கு பூஜையும், ஐயப்ப கன்னி பூஜையும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டது. 1008 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.

இதனைத் தொடா்ந்து ஐயப்ப கன்னி பூஜை நடைபெற்றது. மகாதீபாராதனை காட்டப்பட்டு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஐயப்ப பக்தா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT