ஆன்மிகம்

குயவன்குடி முருகன் கோயிலில் கோபுரக் கலசம் திருட்டு!

14th Dec 2019 11:13 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் அருகேயுள்ள பிரபல குயவன்குடி முருகன் கோயிலில் கலசத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ளது குயவன்குடி. இங்கு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோயிலின் நிா்வாகத் தலைவராக அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன் (83) உள்ளாா்.

இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி புதன்கிழமை இரவு கோயிலை பூட்டிவிட்டு பூசாரி சென்றுள்ளாா். மறுநாள் வியாழக்கிழமை (டிச.12) பாா்த்தபோது கோயிலின் சிறிய கோபுரக் கலசம் திருடப்பட்டிருந்தது. அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. மேலும், கோயிலுக்குள் வேறு எந்தப் பொருளும் திருடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக கோயில் நிா்வாகத் தரப்பில் சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT