ஆன்மிகம்

2020-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது?

6th Dec 2019 05:13 PM

ADVERTISEMENT

 

2020-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது? எந்த தேதியில் வருகிறது? எனப் பல குழப்பங்கள் நிலவி வருகின்றது. ஆனால், சீக்கிரம் விடிவுகாலம் வராதா என்று ரிஷபம், தனுசு உள்ளிட்ட ராசிக்காரர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம். சனிப்பெயர்ச்சி எப்போது என்று சரியான தேதியை தெரிஞ்சிக்கலாம் வாங்க.

சனி பகவானை பற்றி சில தகவல்கள்.. 

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை,  தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் யாருமில்லை.

ADVERTISEMENT

சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான நவக்கிரகமாகக் கருதப்படும் சனிபகவான் சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்துவிடுவார். அப்படிப்பட்ட சனி அவரவர் ஜென்ம ராசியில் அதாவது ஒன்றாம் வீட்டில்  சஞ்சரிப்பதை ஜென்ம சனி என்றும், இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது பாத சனி என்றும் சொல்லப்படுகிறது. ஏழரை ஆண்டு சனி காலத்தில் இது வரும். 

அனைத்து பெயர்ச்சிகளை விடவும் அதிகம் பயப்படுகின்றார்கள் என்றால் அது சனிப்பெயர்ச்சிக்கு மட்டும்தான். ஏன்? என்றால் சனி ஒரு ராசியில் 21/2 ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கின்றார். இந்த காலகட்டத்தில் வாழ்க்கை என்ற பாடத்தை நமக்குக் கற்றுக்கொடுத்துவிட்டுச் செல்கின்றார். அதிலும், ஏழரை சனி என்றால் சொல்லவா வேணும்? ஒருவர் வாழ்வில் அதாவது, தலை முதல் பாதம் வரை பதம் பார்த்துவிட்டுச் செல்வார் என்றே சொல்லலாம்.

சனிப்பெயர்ச்சி எப்போது? 

நம் ஜோதிடப்படி இரண்டு வகையான பஞ்சாங்கத்தைப் பின்பற்றி நாம் பலன்களை கணித்துவருகிறோம். ஒன்று திருக்கணித பஞ்சாங்கம், மற்றொன்று வாக்கிய பஞ்சாங்கம். 

அந்தவகையில் முதலில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படியே சனிப்பெயர்ச்சி நிகழ்கின்றது. விகாரி வருடம் தை மாதம் 10-ம் தேதி அதாவது 2020 ஜனவரி 24-ம் தேதி  சனிப்பெயர்ச்சி நிகழ்கின்றது. 

அடுத்ததாக வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 2020 டிசம்பர் 26-ம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டு பஞ்சாங்கத்திற்கு ஒரு மாத கால இடைவெளி வரும் சரி.. ஆனால் இந்த வருடம் நிகழ உள்ள சனிப்பெயர்ச்சி மட்டும் 11 மாத கால இடைவெளி ஏற்படுகிறது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கிய பஞ்சாங்கமோ, திருக்கணித பஞ்சாங்கமோ எதுவாக இருந்தாலும், சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார் என்பது மட்டும் உண்மை. ஆக, தனுசு, மகரம், கும்பம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடைபெறும். 

கடந்த ஏழரை வருடமாக சனிபகவான் பிடியில் சிக்கி அல்லல்பட்டு வந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஏழரை சனி முடிவடையும் ஆண்டாக இருக்கும். அப்போது, விருச்சிக  ராசிக்காரர்கள் ஐய்... ஜாலி என்று துள்ளிக்குதிக்கலாம். வாழ்வில் அனைத்து விஷயத்திலும் புதுவித திருப்பத்தையும் ஏற்றத்தையும் காணப் போகிறார்கள் விருச்சிக ராசிக்காரர்கள் என்பது மட்டும் உண்மை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT