ஆட்சியை பிடிக்கப் போவது யார்? தினமணி வாசகர்களே உங்கள் கணிப்பு என்ன?

உங்களுடைய கணிப்புகள் என்னவாக இருக்கிறது என்பதை நீங்கள் தினமணி இணையதளத்தோடு பகிரலாம்.
ஆட்சியை பிடிக்கப் போவது யார்? தினமணி வாசகர்களே உங்கள் கணிப்பு என்ன?


17-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மே 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவைத் தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 

கடைசி கட்ட வாக்குப்பதிவும் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே பெரும்பாலான இடங்களை கைப்பற்றுவதாக தெரிவிக்கின்றன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறவுள்ளதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

ஆனால், இந்த கருத்துக் கணிப்புகளை காட்டிலும் மக்கள் தீர்ப்பே இறுதியானது என்று திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று வெளியானது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று விமரிசித்திருந்தார்.

2004 மற்றும் 2009 ஆகிய மக்களவைத் தேர்தலில் நிறைய கருத்துக் கணிப்புகள் முடிவுகளை தவறாகவே கணித்துள்ளன என்கிற உதாரணங்களும் நேற்று முதல் இணையத்தில் உலாவி வருகின்றன.

வாசகர்களே, உங்கள் எண்ணம் என்னவாக இருக்கிறது? மத்தியில் ஆட்சியை பிடிக்கப் போவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியா அல்லது மூன்றாவது அணி அமைகிறதா? 

கருத்துக் கணிப்புகள் என்பது நிறைய மாதிரிகளை கொண்டு பல களப் பணிகளுக்கு பிற்பாடுதான் வெளியிடப்படுகிறது. எனினும், உங்களுடைய கணிப்புகள் என்னவாக இருக்கிறது என்பதை நீங்கள் தினமணி இணையதளத்தோடு பகிரலாம்.

உங்களுடைய கணிப்பும், மே 23-ஆம் தேதி வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளும் ஏறக்குறைய 10 இடங்கள் வித்தியாசத்தில் சரியாக இருக்கும்பட்சத்தில் ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

நீங்கள் செய்ய வேண்டியது

மொத்தமுள்ள 542 இடங்களில் பாஜக கூட்டணி எத்தனை இடங்களை பிடிக்கும், காங்கிரஸ் கூட்டணி எத்தனை இடங்களை பிடிக்கும், பிற கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் என்ற எண்ணிக்கையையும்..

அதேபோல், புதுச்சேரி உட்பட தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் (வேலூர் தவிர்த்து) திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பிற கட்சிகள் வெல்லும் இடங்களின் எண்ணிக்கையையும் dinamani.readers@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். மின்னஞ்சலை அனுப்ப கடைசி நாள் 22ம் தேதி மாலை 5 மணி வரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com