உள்ளாட்சித் தேர்தல் 2019

தேர்தல் பார்வையாளரின் வாகனத்தை வழிமறித்த மக்கள்

27th Dec 2019 01:59 PM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது வேங்கூர் ஊராட்சி. இங்குள்ள வாக்குச் சாவடியில் பணியிலிருந்த காவல்துறையினர், அப்பகுதி வீடுகளுக்குள் இருந்தவர்களை தேவையற்ற காரணங்களை கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அங்கு வந்த தேர்தல் பார்வையாளரின் வாகனத்தை வழிமறித்து காவல்துறையினர் மீது புகார் தெரிவித்தனர்.

வாகனத்திலிருந்து இறங்கிய பார்வையாளர் கணேஷ்,  விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT