உள்ளாட்சித் தேர்தல் 2019

தனி வாக்குச்சாவடி இல்லையே? பார்வையற்ற வாக்காளர்கள் பரிதவிப்பு

27th Dec 2019 10:31 AM

ADVERTISEMENT

 

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பார்வையற்றோர் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்டம் பார்வையற்றோர் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் சரவணன் கூறியது: 

மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சியில் காந்தி நகர், எம்ஜிஆர் நகர் வாக்குச் சாவடிகளில் பார்வையற்றோர் அதிகம் உள்ளனர். இதில் எம்ஜிஆர் நகர் வாக்குச் சாவடியில் 240 பார்வையற்ற வாக்காளர்கள் உள்ளனர். 

ADVERTISEMENT

ஆனால், நாங்கள் வாக்களிக்கும் விதமாக சிறப்பு பூத் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் விழியிழந்தோர் சிரம்ப்பட நேரிட்டது. பிரெய்லி வாக்குச் சீட்டு இல்லை. உதவியாளர் துணையுடன் வாக்களிக்க காத்திருக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT