உள்ளாட்சித் தேர்தல் 2019

தஞ்சையில் 1,378 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு

27th Dec 2019 12:20 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள், திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் முதல் கட்டத் தேர்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதற்காக மொத்தம் 1,378 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி வரை 7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT