உள்ளாட்சித் தேர்தல் 2019

கடலூர் விலங்கல்பட்டு ஊராட்சி வார்டில் வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்

27th Dec 2019 10:44 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 

260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சித் தலைவா்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கு மொத்தம் 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடைபெறுகிறது.  

இந்நிலையில், கடலூர் மாவட்டம் கடலூர் ஒன்றியம் விலங்கல்பட்டு ஊராட்சி வார்டு எண் 4-இல் போட்டியிடும் வேட்பாளர் மோகனா என்பவரது சின்னம் கார் வாக்குச் சீட்டில் இல்லாததால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT