LIVE

Tamil News LIVE: அணு ஆயுதத்தைப் பயன்படுத்த சட்டம் இயற்றிய வடகொரியா

9th Sep 2022 11:23 AM

ADVERTISEMENT

முதன்மைச் செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் இங்கே.. தினமணி.காம்-உடன் இணைந்திருங்கள்.

Live Updates
10:05 Sep 9

காசநோயை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

காசநோயை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

08:53 Sep 9

ரயில்வே காவலர் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

மாற்றுத்திறனாளி பயணியை தூக்கிச் சுமந்து சென்று இருக்கையில் அமர உதவிய ரயில்வே காவலர் சரவணனை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

 
08:51 Sep 9

தமிழகத்தில் மேலும் 436 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,72,802-ஆக அதிகரித்துள்ளது.

08:44 Sep 9

அணு ஆயுதத்தைப் பயன்படுத்த சட்டம் இயற்றிய வடகொரியா

போர் அச்சுறுத்தல் சூழலில் அணு ஆயுதத்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும் சட்டத்தை வடகொரியா நிறைவேற்றியுள்ளது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

06:51 Sep 9

கனல் கண்ணனின் ஜாமீன் நிபந்தனையை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்றம்

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனின் ஜாமீன் நிபந்தனையை நாளை முதல் செப்.17 வரை நிறுத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

06:22 Sep 9

ராணி எலிசபெத்துக்காக காத்திருந்த மன்னரின் உடல்

பிரிட்டன் ராணி எலிசபெத் உடலும், அவரது மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் அரசமரியாதையுடன் அருகருகே நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றன. எடின்பரோ கோமகன் பிலிப்பின் உடல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராணி எலிசபெத்துக்காக காத்திருந்தது.
06:22 Sep 9

மூன்று முறை இந்தியா வந்த ராணி இரண்டாம் எலிசபெத்

பல்வேறு காலகட்டங்களில் மூன்று முறை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அதில் கடந்த 1961ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக ஜவகர்லால் நேரு பதவி வகித்த போது இந்தியாவுக்கு வருகை தந்த ராணி இரண்டாம் எலிசபெத், தில்லியில் உள்ள ராம்லீலா அரங்கில், கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றினார். 
06:22 Sep 9

அரசுக் கட்டடங்களிலிருந்து அலுவலகத்தை காலி செய்யும் ஏர் இந்தியா

அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வரும் ஏர் இந்தியா குழுமத்துக்குச் சொந்தமான அலுவலகங்களை காலி செய்யும் முனைப்பில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது.
05:48 Sep 9

சென்னை துலீப் கோப்பை: ரஹானே இரட்டைச் சதம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் வட கிழக்கு மண்டலத்துக்கு எதிரான துலீப் கோப்பை ஆட்டத்தில் மேற்கு மண்டல வீரர்கள் ரஹானே, ஜெயிஸ்வால் ஆகியோர் இரட்டைச் சதம் எடுத்துள்ளார்கள்.
05:42 Sep 9

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மனப் பயிற்சியும் சேர்த்து அளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வை ரத்தும் செய்யும் வரை மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, ஜெயலலிதாவின் ஆட்சியில் தொடங்கிய இலவச பயிற்சி மையங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஒன்றியங்கள் தோறும் பயிற்சி மையங்களை தொடங்கிவைத்து, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவச் செல்வங்களுக்கு பயிற்சியையும், அதனுடன் மனப் பயிற்சியையும் சேர்த்து அளிக்க வேண்டும் என்று  அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

04:46 Sep 9

சூர்யா - சிறுத்தை சிவா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடிக்கிறார். 

04:29 Sep 9

காரைக்கால் மாணவர் உயிரிழப்பு விவகாரம்: அரசு மருத்துவர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்

விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு தொடர்பாக,  அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
04:28 Sep 9

குருணை அரிசி ஏற்றுமதிக்கு இன்று முதல் தடை

அரிசி உற்பத்தி குறைந்ததால், குருணை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதித்துள்ளது. 
04:27 Sep 9

அரசுப் பள்ளியில் குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!

ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை சாப்பிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்தனர்.  108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
04:03 Sep 9

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹேடன்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
03:49 Sep 9

எவ்வாறு ராணியானார் எலிசபெத்... ருசிகரமான தகவல்கள்...

பிரிட்டனில் மிக நீண்ட காலம் அரசியாக இருந்துமறைந்த எலிசபெத், நாட்டின் ராணியாகப் பட்டமேற்றபோது வயது வெறும் 26-தான்! சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் பிரிட்டிஷ் மன்னரான ஆறாம் ஜார்ஜ், மூளையில் ரத்தநாளங்கள் வெடித்ததால் உறக்கத்திலேயே உயிர்துறந்தார். மேலும் படிக்க..

03:49 Sep 9

3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெற வேண்டும்: ஸ்டோக்ஸ் விருப்பம்

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 96. எலிசபெத் மறைவு காரணமாக லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. டெஸ்ட் குறித்த அடுத்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: அவருக்கு (எலிசபெத்) விளையாட்டு பிடிக்கும். அவருடைய நினைவாக டெஸ்டில் விளையாடுவதை கெளரவமாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
02:51 Sep 9

சென்னை துலீப் கோப்பை: ஜெயிஸ்வால் இரட்டைச் சதம், ரஹானே சதம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் வட கிழக்கு மண்டலத்துக்கு எதிரான துலீப் கோப்பை ஆட்டத்தில் மேற்கு மண்டல அணியின் கேப்டன் ரஹானே சதமடித்துள்ளார். தொடக்க வீரர் ஜெயிஸ்வால் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். மேற்கு மண்டல அணி 100 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 466 ரன்கள் எடுத்துள்ளது. பிருத்வி ஷா 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜெயிஸ்வால் 205, ரஹானே 137 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
02:38 Sep 9

தமிழக அரசு எப்படி பணியாற்றுகிறது? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற நிலையை அடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்கக் கூடாது என்று பணியாற்றி வருகிறோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
01:55 Sep 9

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சேலத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி சேலம் நாட்டாமை கழக கட்டிட வளாகத்தில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் கூட்டியக்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
01:43 Sep 9

நடிகர் விஷாலுக்கு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம்

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய  நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரம் அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.
01:07 Sep 9

ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஆன்லைன் ரம்மி சட்ட ரத்துக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
12:59 Sep 9

க்யூட்-இளநிலை தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15-ல் வெளியீடு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வு (க்யூட்) முடிவுகள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு நிர்வாகி ஜகதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
12:58 Sep 9

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்களை மறுஆய்வு செய்ய வேண்டும்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12:58 Sep 9

சார்லஸ் மனைவி கமிலாவுக்கு ராணி பட்டம்!

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ்(73) பிரிட்டனின் அடுத்த அரசரானார். இதையடுத்து, சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனின் புதிய ராணியாகிறார் கமிலா. எனினும் சார்லஸ் மன்னரானாலும் கமிலா கன்சார்ட் இளவரசி என்றே அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

12:57 Sep 9

பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
12:36 Sep 9

பூங்காவை இடித்து தன் வீட்டுக்குச்  சாலை போட முயற்சி செய்த திமுக கவுன்சிலர்

ஈரோடு மாநகராட்சியில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்காவை இடித்து, எந்த வித அனுமதியுமின்றி  தன் வீட்டுக்குச்   சாலை  அமைக்க திமுகவை சேர்ந்த 20 வார்டு கவுன்சிலர் மோகன் முயற்சி செய்து உள்ளார். 
12:36 Sep 9

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும்!

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12:09 Sep 9

சொத்து விவரம் தாக்கல்: விஷாலுக்கு 2 வாரம் அவகாசம்!

சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12:03 Sep 9

எலிசபெத் மறைவு: இங்கிலாந்து - தெ.ஆ. டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் நேற்று காலமானதையடுத்து லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. டெஸ்ட் குறித்த அடுத்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆகிய இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து முடிவெடுக்கவுள்ளன.
11:57 Sep 9

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் திறப்பு: போக்குவரத்து துண்டிப்பு

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் நான்காவது முறையாக வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

11:56 Sep 9

ராகுல் காந்தியின் நடைப்பயணம்

11:54 Sep 9

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து    ரூ.4735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
11:32 Sep 9

யு.எஸ். ஓபன்: இறுதிச்சுற்றில் மோதும் வீராங்கனைகள்!

யு.எஸ். ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுக்குப் பிரபல வீராங்கனைகளான ஸ்வியாடெக், ஆன்ஸ் ஜபேர் ஆகியோர் தகுதியடைந்துள்ளார்கள்.
11:24 Sep 9

கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு வரும் வழியில் விபத்து: 3 பேர் பலி 

கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு வரும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் பலியாகினர்.  கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ரோஷன்(18) தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை காரில்(Suzuki Iszusu) நண்பர்களுடன் வந்து கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டது. 
11:24 Sep 9

திருவாரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தம்

திருவாரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  
11:23 Sep 9

விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு: காரைக்காலில் கடையடைப்புப் போராட்டம்

காரைக்கால்: விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, காரைக்காலில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
11:23 Sep 9

நாகர்கோவிலில் ராகுலின் 3-ம் நாள் நடைப் பயணம் தொடங்கியது!

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூன்றாவது நாள் பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாகர்கோவிலில் இன்று தொடங்கினார். 
ADVERTISEMENT
ADVERTISEMENT