2022 - 23ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கியம்சங்கள்..
2022 - 23 தமிழக பொது பட்ஜெட் சிறப்பம்சங்கள்
Live Updates
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
உற்பத்தி குறைவாக உள்ள மே, ஜுன், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சாகுபடியினை அதிகரிக்கும் விதமாக, தக்காளி விவசாயிகளுக்கு, ஊக்கத் தொகையாக அல்லது இடுபொருட்களாக, ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் மானியத்தில், ஐந்து ஆயிரம் ஏக்கரில், இத்திட்டம் நான்கு கோடி ரூபாய் மத்திய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
பனை மேம்பாட்டு இயக்கம் - பனை மதிப்பு கூட்டு பொருள்களுக்கு முக்கியத்துவம்
பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இவ்வரசினால் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மானியத்தில் பம்புசெட்டுகளை கைபேசி மூலம் இயக்கும் கருவி
விவசாயிகளுக்கு கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்கப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மாணவியர் விடுதிகளிலும் காய்கறி, பழங்கள், மூலிகைச் செடிகளுக்கான தோட்டம் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் அறிவித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் முருங்கை நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படும்.
2022-23 ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மூலிகை தோட்டங்கள் நான்கு ஆயிரம் வீடுகளில் அமைக்கப்படும். இதற்கு தேவையான மூலிகைச் செடிகள், அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும்.
மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றிற்கான மரபணு வங்கி, நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் துவக்கப்பட்டு, உள்ளூர் வகைகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான உழவு, நடவு, இடுபொருட்கள், அறுவடை போன்ற பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
பொருட்களைத் தரம் பிரித்து, சிப்பம் கட்டி விநியோகம் செய்ய, மூன்று சேமிப்பு கிடங்குகள் சென்னை, மதுரை, கோவையில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியில் ஏற்படுத்தப்படும்.
தேனி, கோவை, கன்னியாகுமரியில் பொது, தனியார் பங்களிப்புடன் காய்கறி வளாகங்கள் அமைக்கப்படும்.
ஊரக வளர்ச்சித்துறை மூலமாக ரூ. 1,245 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் அமைத்தல், தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் 'தமிழ் மண் வளம்' என்ற இணையதளம் உருவாக்கப்படும்.
நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றுக்கான மரபணு வங்கி தொடங்கப்படும்.
பனை சாகுபடியை ஊக்குவிக்க இந்த ஆண்டு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் 10 இடங்களில் அரசு மீன் பண்ணைகள் அமைக்கப்படும்.
காவிரி டெல்டாவில் கால்வாய் மற்றும் வாய்க்கால்களை தூர்வார ரூ. 80 கோடி ஒதுக்கீடு
பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதி ரூ.5 கோடி
வேளாண் நிறுவனங்களின் வேளாண் வணிக ரீதியான முயற்சிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்.
வேளாண் பயன்பாட்டிற்கு விவசாயிகளுக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கப்படும்; 60 ட்ரோன்களை வாங்குவதற்கும் பயிற்சி அளிக்கவும் ரூ. 10.32 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
திண்டிவனம், தேனி, மணப்பாறையில் ரூ. 381 கோடியில் உணவுப்பூங்காக்கள் அமைக்கப்படும்.
மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, உழவர் சந்தைகள் காலை மட்டுமின்றி மாலை நேரங்களிலும் விற்பனை செய்யப்படும். மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறு தானியங்கள், பயறுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும்
தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 50 உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும். கணினி, தகவல் தொழில்நுட்ப வசதிகள், மின்னணு பலகை ஆகியவற்றுக்கு மத்திய அரசின் உதவியுடன் ரூ. 15 கோடி ஒதுக்கப்படுகிறது.
கோத்தகிரி, வேப்பந்தட்டை, பண்ருட்டி, சிதம்பரம், திருவாரூர், கீழ் பென்னாத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள உழவர் சந்தைகளை நுகர்வோர் அதிகம் கூடும் இடத்திற்கு மாற்றப்படும்.
தருமபுரி, நாகை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் புதிய உழவர் சந்தைகளை அமைக்க மொத்தம் ரூ. 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகத்தில் தற்போதுள்ள 109 உழவர் சந்தைகளின் விவசாய பங்களிப்பை மேலும் அதிகரிக்க விவசாய, தோட்டக்காலை நிபுணர்கள் மூலமாக ஆலோசனை வழங்கப்படும்.
தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 15 கோடி ஒதுக்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக 10 உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
-வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தில் 3,000 மானாவாரி நிலத் தொகுப்புகளில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறுவதற்கு ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கருப்பட்டி உள்ளிட்ட பனை சார்ந்த மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்திக்கு 75% மானிய உதவி
பூண்டு சாகுபடியை அதிகரிக்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ குணம் கொண்ட இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட இடுபொருள்களுக்காக ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இலவச திட்டங்களுக்கான மானியமாக மின் வாரியத்திற்கு ரூ. 5,157 கோடி ஒதுக்கீடு
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கரும்பு சாகுபடிக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் ரூ.32.48 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
சூரியகாந்தி சாகுபடி பரப்பு உற்பத்தித் திறன் உயர்த்தப்படும்.
வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் தர ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ. 195 வழங்கப்படும்.
இயற்கை விவசாயத்திற்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
மரம் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு
விதை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 30 மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்படும்
சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க 2 மண்டலங்கள் அமைக்கப்படும்
மயிலாடுதுறையில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மண்பரிசோதனைக் கூடம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
உரம் பயன்பாடு, பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க 7 சிறப்பு உழவர் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு, அரசு விதை பண்ணைகளில் 200 ஏக்கரில் உற்பத்தி செய்ய 20,000 விவசாயிகளுக்கு மானிய அளவில் நிதி வழங்கப்படும். இதற்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ₹300 கோடி ஒதுக்கீடு
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ₹71 கோடி நிதி ஒதுக்கீடு
பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 2,339 கோடி ஒதுக்கப்படுகிறது.,
9.26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2021-22ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளது.
விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க மாவட்டவாரியாக குழுக்கள் அமைக்கப்படுகிறது.
சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
காலநிலை மாற்றத்தை தாங்கும் வகையில் மாற்றுப் பயிர் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரிதளவில் உணரப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன
தமிழகத்தில் வேளாண்மையை உச்சத்திற்கு அழைத்துச் செல்ல வேளாண் அறிக்கை திட்டங்கள் பெரிதும் உதவும்
உளவுத் தொழிலே உன்னதம் நிறைந்தது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் தன்னம்பிகை ஒளிரச் செய்யும் நோக்கில் இன்று வேளாண் அறிக்கையை 2வது முறையாக தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
-எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
வேளாண் பட்ஜெட்: கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் மரியாதை
வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டப் பேரவையில் 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். துறை ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலாக உள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், வேளாண்மைக்குத் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு முதன்முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.