LIVE

5 மாநில தேர்தல் முடிவுகள்: செய்திகள் உடனுக்குடன்

DIN

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்.. தினமணி.காம் இணையதளத்துடன் இணைந்திருங்கள்..

உ.பி. வாக்கு எண்ணிக்கை நிறைவு: 273 இடங்களில் பாஜக வெற்றி

 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. சமாஜவாதி கூட்டணி 121 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி நிலையைப் பெற்றுள்ளது

உத்தரகண்ட் வாக்கு எண்ணிக்கை நிறைவு: 47 இடங்களில் பாஜக வெற்றி

 உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வென்றுள்ளது

சுக்பிர் சிங் பதால் பின்னடைவு

சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பிர் சிங் பதால் பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஆம் ஆத்மிக்கு சித்து வாழ்த்து

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மிக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெரும்பான்மையான இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்பல் பாரிக்கர் பின்னடைவு

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு பனாஜி தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கேஜரிவால் வாழ்த்து

பஞ்சாப் மக்களின் இந்த புரட்சிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஹரீஷ் ராவத் பின்னடைவு

காங்கிரஸ் மூத்த தலைவரும், உத்தரகண்ட் முன்னாள் முதல்வருமான ஹரீஷ் ராவத் 10 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.

காங்கிரஸுக்கு பின்னடைவு

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

11.30 மணி நிலவரம்

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகித்து வருகின்றது.

இருப்பினும், மணிப்பூர் மற்றும் கோவாவில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களுக்கான முன்னிலையை பாஜக இன்னும் பெறவில்லை.

மணிப்பூரில் வாக்கு எண்ணிக்கை நிறைவு: பாஜக வெற்றி

 மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த நிலையில், பாஜக 32 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.  

பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆம் ஆத்மி அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

பஞ்சாப்பில் முடிவுகள் தெரியவரும் முன்பே ஜிலேபிகளுடன் தயாரான ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் பக்வந்த் மன், தேர்தல் முடிவுகள் தெரியவரும் முன்பே, தனது வீட்டில் பெரிய அளவில் கொண்டாட்டங்களை நடத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டார்.

கோவாவில் வாக்கு எண்ணிக்கை நிறைவு: பாஜக 20 இடங்களில் வெற்றி

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கை 10 மணி நிலவரம்

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூரில் பாஜக முன்னிலை

பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலை

கோவாவில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி

பஞ்சாபில் நவ்ஜோத் சிங் சித்து பின்னடைவு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்து, இரண்டாம் சுற்று முடிவில் பின்னடைவில் உள்ளார். 

சரண்ஜித் சிங் சன்னி பின்னடைவு

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பிரமோத் சாவந்த் பின்னடைவு

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பஞ்சாபில் வாக்கு எண்ணிக்கை நிறைவு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அமரீந்தர் சிங் பின்னடைவு

பஞ்சாப் லோக் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் நிலவரம்

மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றன.

யோகி ஆதித்யநாத் முன்னிலை

உத்தரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலை

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலை

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து முன்னிலை

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பின்னடைவு

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்டுள்ள இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றார்.

முன்னிலை நிலவரம்

தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவாவில் முன்னிலை பெறுவதற்காக கடும் போட்டிகள் நிலவி வருகின்றன.

தேர்தல் முடிவுகள்: மோடி கருத்து

கோவாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பாஜக புதிய வரலாறு படைத்துள்ளது

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பணி தொடங்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14-ஆம் தேதியும், பஞ்சாபில் பிப்ரவரி 20-ஆம் தேதியும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. மணிப்பூரில் பிப்ரவரி 28, மாா்ச் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது.

பாஜகவின் யோகி ஆதித்யநாத் வெற்றி

உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் தொகுதியில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றுள்ளார். 

உத்தரப் பிரதேசம்: சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி

 சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

பிரதமர் மோடியின் புதிய இந்தியா கனவு நிறைவேறும்: பொம்மை


பிரதமர் நரேந்திர மோடியின் 'புதிய இந்தியா' கனவு நிறைவேறும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் பின்னடைவு: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட சோனியா முடிவு

 
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி

 உத்தரகண்ட் மாநிலம் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியைத் தழுவினார். 

கோவா: டிஎம்சி-க்கு எல்லா இடங்களிலும் பின்னடைவு

 
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) அனைத்து இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்: ராகுல் காந்தி உறுதி

 தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சுட்டுரை பக்கத்தில், "மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன். வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். 

மருத்துவம் படிக்க உக்ரைனுக்கு செல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: கேஜரிவால்

 மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் தலைவர்கள் தோல்வி

 சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். 

பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் 2 தொகுதிகளிலும் தோல்வி

 பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார்.

பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் 2 தொகுதிகளிலும் தோல்வி

 பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார்.

நவ்ஜோத் சிங் சித்து 6,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

 பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்து தோல்வியுற்றார். 

ஹரிஷ் ராவத் தோல்வி

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தோல்வி அடைந்தார்.

பஞ்சாப் முதல்வர் இரு தொகுதிகளிலும் தோல்வி

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் பதால் ஆகியோரும் தோல்வியை தழுவியுள்ளனர்.

பிரமோத் சாவந்த் வெற்றி

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்றுள்ளார்.

பஞ்சாப் தேர்தல்

பஞ்சாப் மக்கள் வழங்கிய முடிவை நாங்கள் முழு மனதுடனும் மனத்தாழ்வுடனும் ஏற்றுக் கொள்கிறோம் என சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பதால் தெரிவித்துள்ளார்.

கோவா முன்னாள் முதல்வரின் மகன் உத்பல் பாரிக்கர் தோல்வி

 கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பனாஜி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். 

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தோல்வி

 பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாட்டியாலா நகர்ப்புற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். 

பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் தலைவர்கள் கடும் பின்னடைவு

 சிரோமணி அகாலி தளக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார். 

சுக்பீர் சிங்கின் தந்தையும் பஞ்சாபில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான பர்காஷ் சிங் பாதலும், தான் போட்டியிட்ட லம்பி தொகுதியில் பின்னடைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாப் முதல்வர் தொடர்ந்து பின்னடைவு

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

‘கோவாவில் ஆட்சி அமைப்போம்’

கோவாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

கோவா பேரவையில் இதுவரை பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் எந்த கட்சியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT