LIVE

பொது பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்

DIN

2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

மத்திய நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.. 

பட்ஜெட் உரை நிறைவு

 நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.30 மணி நேரம் உரையாற்றி நிறைவு செய்தார். 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், துறை ரீதியாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

சரியாக 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத்  தொடங்கிய அமைச்சர் 12.30 மணிக்கு நிறைவு செய்தார். 

விவசாயத் துறைக்கு பல்வேறு திட்டங்கள், எண்ம முறையில் கல்வி, எண்ம முறையில் பணப்பரிவர்த்தனை மையங்கள், கல்வி சேனல்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. 

வருமான வரி விகிதம் குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 வருமான வரிக் கணக்கு தாக்கலில் திருத்தம் செய்ய 2 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  

வருமான வரி செலுத்துவபர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கலில் தவறு இருந்தால் அதனை திருத்தம் செய்யலாம். 

திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது. 

கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கும் திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார். 

 வரும் 2022 - 2023ஆம் நிதியாண்டில் செலவு ரூ. 39.5 லட்சம் கோடியாகவும், வரவு ரூ. 22.8 லட்சம் கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 6.4 சதவீதமாக குறையும் எனத் தெரிவித்துள்ளார்.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு தொடர்பான அறிவிப்பில்லை

வருமான வரி விலக்கு உச்சவரம்பு பெறுவது தொடர்பான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இதனால், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு எந்தமாற்றமும் இன்றி 2.50 லட்சமாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஒட்டுமொத்த  ஜிஎஸ்டி வரி வசூல் 1,40, 986 கோடி ரூபாய் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிட்காயின் போன்ற எண்ம (டிஜிட்டல்) கரன்சி வருவாய்க்கு 30 சதவீத விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ராணுவ தளவாடங்களில் 68 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியாக உருவாக்க திட்டம்.
எண்ம (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனை மையங்கள் உருவாக்கப்படும்.
எண்ப பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு மாவட்டங்களில் புதிய மையங்கள் திறக்கப்படும். 
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும்வகையில், நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் எண்ம பரிவர்த்தனை மையங்கள்  உருவாக்கப்படும்.

விவசாயத்துறை சார்ந்த அறிவிப்புகள்

விவசாய நிலங்களை அளவிடவும் விவசாய உற்பத்தியை கண்காணிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். 

ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.60,000 கோடி ஒதுக்கீடு 

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

விவசாயிகளிடம் இருந்து கடந்த ஆண்டு ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 1,000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான தொடக்க நிலை நிதியளிக்க நபார்டு மூலம் எளிதாக வசதி ஏற்படுத்தப்படும்.

ஸ்டார்ட்அப்கள் கொண்ட விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரிவளிக்கப்படும். விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படும்.

ரூ. 44,605 கோடி மதிப்பிலான கென் - பெட்வா இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 9 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும். உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளின் வேளாண்மை, வாழ்வாதார வசதிகள் மேம்படுத்தப்படும். 

இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். எண்ணெய் வித்துகள் மற்றும் சிறு  தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 

தொழில்நுட்ப ரீதியான விஷயங்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுபடுத்தப்படும்.

டிஜிட்டல் கரென்சி

டிஜிட்டல் கரென்சியை ரிசர்வ் வங்கி நேரடியாக அறிமுகம் செய்யவுள்ளது.

மத்திய அரசின் எண்ம (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனை கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய ரிசர்வ் வங்கி மூலம் எண்ம கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
எண்ம (டிஜிட்டல்) கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த விருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.1 லட்சம் கோடி ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இ- சேவை மூலம், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை மூலம் அனைத்து கிராமங்களையும்  ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் 280 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். அதாவது, சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், உட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை அறிமுகம் செய்யப்படுகிறது.

 நில சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக ஒரு நாடு, ஒரு பதிவு முறை அறிமுகம் செய்யப்படும்.

அனிமேஷன், கிராபிக்ஸ் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 வெளிநாடு செல்வோரின் வசதிக்காக சிறப்பு வடிவிலான இ - பாஸ்போர்ட் வசதி இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி

நடப்பாண்டில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஏலம் விடப்படும்.

ஒரே நாடு, ஒரே ஆவணப் பதிவு திட்டம்

  • நில ஆவணங்களை மின்னனு முறையில் ஆவணப்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும்.
  • ஒரே நாடு, ஒரே ஆவணப் பதிவு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இ-பாஸ்ப்போர்ட்

    நவீன தொழில்நுட்பத்துடன் ‘சிப்’ பொருத்திய இ-பாஸ்ப்போர்ட் அறிமுகம் செய்யப்படும்.

    குறைந்தபட்ச ஆதார விலை

    வேளாண் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்காக ரூ. 2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு

    நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.

    டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்க டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

    வடகிழக்கு மாநிலங்களில் மேம்பாட்டிற்காக ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமரின் கதி சக்தி திட்டம் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    1.50 லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்படும்.

    வங்கிகளுடன் இணைந்து தபால் நிலையங்கள் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    2022 - 2023ஆம் நிதியாண்டு சிறுதானிய நிதியாண்டாக அறிவிப்பு

  • ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • வீடுகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த ரூ. 18 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மனரீதியாக சிகிச்சை அளிக்க மையங்கள் தொடங்கப்படும்.

    சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ. 2 லட்சம் கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கல்வித் தொலைக்காட்சி

  • ஆன்லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
  • 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாநில மொழிகளில் கல்வித் தொலைக்காட்சிகள் தொடங்கப்படும்.
  • நதிகள் இணைப்பு

    கோதாவரி-பென்னாறு-காவிரி உள்ளிட்ட 5 நதிகளை இணைக்கும் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

  • நிலங்களை அளவிட, விளைச்சலை கணக்கிட ட்ரோன் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ரூ. 44,000 கோடியில் நீர் பாசனம் நிறைவேற்றப்படும்.
     
  • 2023ஆம் ஆண்டிற்குள் 2,000 கி.மீ. ரயில் பாதைகள் கட்டமைக்கப்படும்.

    இயற்கை விவசாய முறை ஊக்கவிக்கப்படும்.

    நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

    புதிதாக 100 சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்.

    60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்: நிதிநிலை அறிக்கை

    மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    இளைஞர்கள் தொழில்தொடங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.
    2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
    மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்.. 
    தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கரோனா பரவல் குறைந்துள்ளது.
    உலகின் பெரிய நாடுகளில் இந்தியாவே கரோனா பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து வெகு வேகமாக மீண்டு வருகிறது.
    தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
    நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2 % ஆக இருக்கும்.
    ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
    அரசு மற்ற தனியார் பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்ற முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ, தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

    இளைஞர்கள் தொழில் தொடங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.



    இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும்.

    அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

    நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

  • தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
     
  • அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
     
  • நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2 % ஆக இருக்கும்.
     
  • ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
     
  • ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த 25 ஆண்டுகள் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

     நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது,

    தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கரோனா பரவல் குறைந்துள்ளது.
    உலகின் பெரிய நாடுகளில் இந்தியாவே கரோனா பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து வெகு வேகமாக மீண்டு வருகிறது.

    நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 9.2ஆக உயரும் எனக் கணிப்பு

     2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யத் தொடங்கினார்.

    பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் 2022க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடி வருகை

    பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தனர்.

    பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்.

    போரடிக்கிறதா மத்திய பட்ஜெட்? சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

    மத்திய பட்ஜெட் என்றாலே அது ஏதோ போரடிக்கும் விஷயமாக நினைக்கவேண்டாம். அது பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் இதோ... மேலும் படிக்க..

     2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று 11 மணிக்கு தாக்கல் செய்கிறாா். நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான அவா், தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறாா்.

    பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தார்.

    நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

     மத்திய நிதிநிலை அறிக்கை செவ்வாய்க்கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதில் அரசின் செலவினம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

    தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

    தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

    உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

    திருப்பங்கள் தரும் வேலாயுதன்

    ரத்னம் படத்தின் 2வது பாடல்!

    அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

    கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

    திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

    SCROLL FOR NEXT