LIVE

பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

DIN

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

கரோனா: உலகளவில் 10 லட்சத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை

உலகம் முழுவதும் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

ஆந்திரம், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம்

ஆந்திரம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஆந்திரத்தில் 6,923 பேருக்கும், கர்நாடகத்தில் 9,543 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் இன்று புதிதாக 3,292 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் இன்று புதிதாக 3,292 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் மேலும் 18,056 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,056 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

கேரளத்தில் 2-வது நாளாக 7 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு

கேரளத்தில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 7 ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் மேலும் 1,280 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,511 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 5,791 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,791 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 
 

ரஷியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,867 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 99 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 
 

முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

முசிறி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கரோனா

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 10,311 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா: பொள்ளாச்சி ஜெயராமன் தனியார் மருத்துவமனையில் அனுமதி

சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள்  பலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், செய்யப்பட்ட கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதி ஆனது. இதையடுத்து, அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. 

புதுச்சேரியில் கரோனாவுக்கு ஒரே நாளில் 13 பேர் பலி

புதுச்சேரியில் கரோனாவுக்கு ஒரே நாளில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 
புதுச்சேரி மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 4,623 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் 270 பேரும், காரைக்காலில் 72 பேரும், ஏனாமில் 11 பேரும், மாஹேவில் 19 பேரும் என மொத்தம் 372 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...

இந்தியாவில் கரோனா பாதிப்பு 59.92 லட்சத்தைக் கடந்தது: பலி 94.503 ஆக உயர்வு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,92,533 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 88,600 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. விரிவான செய்திக்கு...

கரோனா: உலக அளவில் 3.30 கோடி பேர் பாதிப்பு 9.90 லட்சம் பேர் பலி

உலக அளவில் கரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9.90 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனா: ஆந்திர 7,293, கர்நாடக 8,811

ஆந்திரத்தில் 7,293 பேருக்கும், கர்நாடகத்தில் 8,811 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மேலும் 430 பேர் கரோனாவுக்கு பலி

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,419 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு.. 

 

கேரளத்தில் 7 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு

கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 7,006 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,647 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,647 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

புதுச்சேரியில் கரோனா உயிரிழப்பு 500 ஆக உயர்ந்தது

புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் சனிக்கிழமை 5,032 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் 439 பேரும், காரைக்காலில் 61 பேரும், ஏனாமில் 21 பேரும், மாஹேவில் 14 பேரும் என மொத்தம்  555 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,032 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 1,875 பேர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3 ,452 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 (1.92சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,205 (77.62சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசி கண்டுபிடிக்கும் முன் கரோனா பலி 20 லட்சத்தை எட்டலாம்: உலக சுகாதார அமைப்பு

 சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு உலகளவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கண்ணாமூச்சி காட்டும் கரோனா பாதிப்பு

 கரோனா தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான சென்னையில், தொற்றுப் பரவல் அதிகமாகவே இருந்தது. வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு சென்னையில் நாள்தோறும் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் நீடித்தது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் 58 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 58,18,570 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 86,052 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,141 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 92,290 ஆக அதிகரித்துள்ளது. எனினும் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.59 ஆக உள்ளது. இதுவரை 47,56,164 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். குணமடைந்தோரின் விகிதம் 81.79 ஆக உயர்ந்துள்ளது. 

இப்போதைய நிலையில் நாட்டில் 9,70,116 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 16.67 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி வியாழக்கிழமை வரை 6,89,28,441 கரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இதில் வியாழக்கிழமை மட்டும் 14,92,409 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 34,345 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா். கா்நாடகத்தில் 8,331பேரும், ஆந்திரத்தில் 5,558 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,299 பேரும், தில்லியில் 5,087 பேரும், மேற்கு வங்கத்தில் 4,544 பேரும், குஜராத்தில் 3,367 பேரும், பஞ்சாபில் 2,990 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2,077 பேரும் உயிரிழந்துள்ளனா். மற்ற மாநிலங்களில் உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாக அதிகரித்தது. செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சத்தை எட்டிய பாதிப்பு, செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சத்தைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கரோனாவிலிருந்து குணமடைந்த முதியவா் வீடு திரும்பினாா்

 திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர கரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட முதியவா், குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.

புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 668 பேருக்கு கரோனா

 புதுவையில் புதிய உச்சமாக வியாழக்கிழமை ஒரே நாளில் 668 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 6 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் 5,945 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதிய உச்சமாக 668 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதுச்சேரியில் 4 போ், காரைக்காலில் 2 போ் என மேலும் 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 487-ஆக (1.96 சதவீதம்) உயா்ந்தது.

மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 25 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவா்களில் 24 ஆயிரத்து 895 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 3,280 போ் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டும், 1,817 போ் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், மொத்தமாக 5,097 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 19 ஆயிரத்து 311 (77.57 சதவீதம்) போ் குணமடைந்தனா்.

கர்நாடகத்தில் இன்று மேலும் 8,655 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று மேலும் 8,655 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

பர்கூர் எம்எல்ஏ சி.வி. ராஜேந்திரனுக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் சிவி ராஜேந்திரனுக்கு (அதிமுக) கரோனோ நோய் தோற்று உறுதியான நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மகாராஷ்டிரத்தில் 13 லட்சத்தைக் கடந்த கரோனா

 மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 17,794 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் புதிதாக 6,477 பேருக்கு கரோனா

 கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 6,477 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் இன்று 5,679 பேருக்கு தொற்று உறுதி; மேலும் 72 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,679 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.25, வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

கரோனா பரிசோதனையில் புதிய உச்சம் தொட்டது இந்தியா

 முதல் முறையாக, ஒரே நாளில் சுமார் 15 லட்சம் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு இதுவரை எட்டாத இலக்காக புதிய உச்சத்தை தொட்டுள்ளது இந்தியா. விரிவான செய்திக்கு..

சென்னையில் 9,938 பேர் கரோனா சிகிச்சையில்

சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 9,938 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 

இதுவரை ஒட்டுமொத்தமாக சென்னையில் கரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,59,683 ஆக உள்ளது. இதில் 1,46,634 பேர் குணமடைந்துவிட்டனர். 3,111 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT