LIVE

அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

DIN

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

உலகளவில் 3 கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்பு

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. 

அமெரிக்காவில் இதுவரை 5.50 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு

அமெரிக்காவில்  இதுவரை 5,50,000 குழந்தைகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

ஹிமாசலில் இ-பாஸ் முறை ரத்து; சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி

ஹிமாசலப் பிரதேச மாநிலத்திற்குச் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் இதுவரை 5.50 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு

அமெரிக்காவில்  இதுவரை 5,50,000 குழந்தைகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

நாட்டில் புதிதாக 90,123 பேருக்கு தொற்று; பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்தது!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,123 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்துள்ளது. விரிவான செய்திக்கு..

உலக அளவில் கரோனா பாதிப்பு 2.97 கோடியாக அதிகரிப்பு!

உலக அளவில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 2.97 கோடியைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் 11 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் புதிதாக 23,365 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் புதிதாக 4,473 பேருக்கு கரோனா: மேலும் 33 பேர் பலி

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 4,473 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பிற மாவட்டங்களில் இன்றும் 5 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) 4,669 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

தமிழகத்தில் மேலும் 5,652 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

கரோனாவிலிருந்து ஒரே நாளில் 82,961 பேர் மீண்டனர்

 இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 82,961 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் வீதம் 78.53% ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

நாட்டில் ஒரே நாளில் 83,809 பேருக்கு கரோனா; 1,054 பேர் பலி

 நாட்டில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

50% படுக்கை வசதிகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்குங்கள்: ஒடிசா அரசு

 ஒடிசா மாநிலத்தில் திடிரென கரோனா தொற்று பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கை வசதிகளை கரோனா சிகிச்சைக்காக ஒதுக்குமாறு ஒடிசா மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

உலகளவில் 3 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு

 உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.94 கோடியை எட்டியுள்ளது. நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 9,32,716 ஆக உயர்ந்துள்ளது.  விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் மேலும் 51,399 பேருக்கு தொற்று உறுதி; ஒரேநாளில் 646 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,399 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. மேலும், 646 பேர் உயிரிழந்தனர். விரிவான செய்திக்கு..

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,708 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,708 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் புதிதாக 5,529 பேருக்கு கரோனா

ரஷியாவில் புதிதாக 5,529 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

உலகளவில் கரோனா பாதிப்பு 2.91 கோடியாக உயர்வு: 9,28,290 பேர் பலி

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.91 கோடியை எட்டியுள்ளது. நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,28,290 ஆக உயர்ந்துள்ளது. 

உலக நாடுகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2,91,85,779 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,28,290 ஆக உள்ளது. 

தமிழகத்தில் 5 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு!

 தமிழகத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 2,759-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15 நாள்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னைக்கு அடுத்த படியாக மேற்கு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில்தான் முதன்முதலில் கரோனா தொற்று தடம் பதித்தது. ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நபருக்கு மாா்ச் 7-ஆம் தேதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாட்டில் புதிதாக 92 ஆயிரம் பேருக்கு கரோனா; 1136 பேர் பலி

 நாட்டில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திங்கள்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் புதிதாக 17,066 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 17,066 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா தொற்றில் இருந்து மீண்டார் ஹரியாணா முதல்வர்

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். தான் விரைவான குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மற்றும் தனது சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், அரசும், அதிகாரிகளும் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களையும் மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். விரிவான செய்திக்கு..

சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் கரோனாவுக்கு பலி

காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சருமான சனேஷ் ராம் ரதியா கரோனா தொற்று காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78. விரிவான செய்திக்கு..

மக்களைவை எம்.பி.க்கள் 17 பேருக்கு கரோனா தொற்று

நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி, செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் 17 மக்களைவை எம்.பி.க்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 65 லட்சத்தைக் கடந்தது!

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 லட்சத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 5,752 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

பொதுமுடக்கம் காரணமாக 29 லட்சம் பேருக்கு கரோனா பரவுவது தடுப்பு: ஹர்ஷ வர்தன்

 நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக சுமார் 29 லட்சம் பேருக்கு கரோனா தொற்றுப் பரவுவது தடுக்கப்பட்டது, 78 ஆயிரம் பேர் பலியாவது தவிர்க்கப்பட்டது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

நாட்டில் ஒரே நாளில் 77,512 பேர் கரோனாவில் இருந்து மீண்டனர்

 நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77,512 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா பலி 3 ஆயிரத்தை நெருங்குகிறது

 சென்னையில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனாவுக்கு 10,393 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் வெறும் 7 சதவீதம்தான். விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் மேலும் 311 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 311 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT