கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
Live Updates
ஆந்திரம், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம்
இதுகுறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 9,536 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கேரளத்தில் இன்று மேலும் 3,139 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று மேலும் 3,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 994 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,699 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் 5 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு
தில்லியில் புதிதாக 4,235 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 4,235 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கோடம்பாக்கம், அண்ணா நகரில் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில்: சென்னை மண்டலவாரியாக விவரம்
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10,645 ஆகக் குறைந்துள்ளது.
கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமாருக்கு கரோனா தொற்று
கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஒரே நாளில் 94,372 பேருக்கு கரோனா: 1,114 பேர் பலி
இந்தியாவில் இதுவரை 5.62 கோடி கரோனா பரிசோதனைகள்
கர்நாடகத்தில் ஒரேநாளில் 9,140 பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் ஒரேநாளில் 9,140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 22,084 பேருக்கு கரோனா: மேலும் 391 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 22,084 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆந்திரத்தில் இன்று மேலும் 9,901 பேருக்கு கரோனா; 67 பேர் பலி
ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 9,901 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 4,321 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,321 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,571 பேருக்கு கரோனா
சென்னை தவிர்த்து தமிழகத்தில் பிற மாவட்டங்களில் புதிதாக 4,571 பேருக்கு இன்று (சனிக்கிழமை) தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,495 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் மேலும் 2,885 பேருக்கு கரோனா
கேரளத்தில் மேலும் 2,885 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் 24 மணி நேரத்தில் 485 காவலர்களுக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 485 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் 24 மணி நேரத்தில் 5,488 பேருக்கு கரோனா
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,488 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரம்: 10 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,519 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் இன்று புதிதாக 5,519 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 5,519 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,91,571 ஆக உயர்ந்துள்ளது.
தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,266 பேருக்கு கரோனா; 21 பேர் பலி
தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புணேவில் அதிக அளவாக ஒரே நாளில் 4,935 பேருக்கு கரோனா
புணேவில் ஒரேநாளில் 4,935 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அருணாசலில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: புதிதாக 127 பேருக்குத் தொற்று
அருணாசலில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு...
ஜார்க்கண்டில் புதிதாக 1,182 பேருக்கு கரோனா
ஜார்க்கண்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,182 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 5 பேர் உயிரிழந்தனர். விரிவான செய்திக்கு...
உ.பி.: கரோனா பரிசோதனைக்கு ரூ.1,600 கட்டணம்
உத்தரப்பிரதேசத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி மூலம் செய்யப்படும் கரோனா பரிசோதனைக்கான செலவை ரூ.2,500-ல் இருந்து ரூ.1,600-ஆக அம்மாநில அரசு குறைத்துள்ளது. விரிவான செய்திக்கு...
ஆமதாபாத்தில் கடந்த 3 நாள்களில் 24 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று
ஆமதாபாத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் 24 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆமதாபாத்தில் கடந்த 3 நாள்களில் 24 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று
ஆமதாபாத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் 24 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா சிகிச்சை பெறுவோரில் 74% பேர் இந்த 9 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்!
நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரில் 74% பேர் மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட 9 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கரோனா சிகிச்சையில் 2.09 லட்சம் பேர் உள்ளனர்
ரஷியாவில் மேலும் 5,504 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 10,51,874 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
'சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்றுவது அவசியம்'
கரோனா பரவலைக் குறைப்பதற்கு சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிப்பது அவசியம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். விரிவான செய்திக்கு..
சென்னையில் மொத்த பாதிப்பில் 7% பேர் மட்டுமே சிகிச்சையில்
சென்னையில் கரோனா பாதித்த ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 7% அதாவது 10,845 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 91% குணமடைந்துவிட்டனர். அதாவது வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,31,840 குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 10,845 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2921 பேர் பலியாகிவிட்டனர்.
கேரளத்தில் 2-ஆவது அமைச்சருக்கு கரோனா தொற்று
கேரள மாநில தொழில்துறை அமைச்சர் ஜெயராஜனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு கரோனா பாதிப்பு: 1,209 பேர் பலி
புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45,62,415 -ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,209 போ் உயிரிழந்தனா்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 76,271-ஆக அதிகரித்தது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,42,664-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 9,43,480 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாட்டில் தொற்றால் அதிக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் தொடர்கிறது. மாநிலத்தில் இதுவரை 2,53,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,86,462 பேர் குணமடைந்துள்ளனர், 27,787 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரத்தில் 97,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மாநிலத்தில் இதுவரை 4,25,607 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், அதே நேரத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4,634 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய தலைநகர் தில்லியில் 23,773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் , 1,72,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், தொற்று காரணமாக இதுவரை 4,638 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 11,63,542 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 10-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 5,40,97,975 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘அறிகுறிகள் காணப்படுவோருக்கு பரிசோதனை’: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவோருக்கு ஆன்டிஜென் துரித பரிசோதனையில் ‘நெகடிவ்’ (கரோனா இல்லை) என முடிவு வந்தாலும், அவருக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த நடவடிக்கையின் மூலமாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். சில மாநிலங்கள் இந்த நடவடிக்கையைக் கடைப்பிடிப்பதில்லை என்று புகாா் எழுந்துள்ளது.
எனவே, ஆன்டிஜென் பரிசோதனையில் ‘நெகடிவ்’ என முடிவு வருபவா்களுக்கு கரோனா அறிகுறிகள் காணப்பட்டால், அவா்களுக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்குக் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளோம். அதை ஆராய்வதற்கு தனிக் குழுவை நியமிக்குமாறும் வலியுறுத்தியுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் கரோனா தொற்று பலி 9.13 லட்சத்தை கடந்தது
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,13,908 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,83,23,788 கோடியை எட்டியுள்ளது.
உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2,83,23,788 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,13,908 ஆக உள்ளது. கரோனா பாதித்த 2,83,23,788 பேரில் 2,03,39,066 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.