LIVE

அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

DIN

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 23,446 பேருக்கு கரோனா; 448 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 23,446 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
 

தில்லியில் புதிதாக 4308 பேருக்கு கரோனா; மேலும் 28 பேர் பலி

தலைநகா் தில்லியில் இன்று மேலும் 4308 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
 

சென்னையில் 991 பேர்; பிற மாவட்டங்களில் 4,537 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,537 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் மேலும் 5,528 பேருக்கு தொற்று உறுதி; ஒரேநாளில் 64 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,528 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.10, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

ரஷியாவில் புதிதாக 5,363 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 128 பேர் பலி

ரஷியாவில் புதிதாக 5,363 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 128 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

 

நீட் தேர்வு: மேற்கு வங்கத்தில் செப்.12-ஆம் தேதி முழு பொதுமுடக்கம் ரத்து

நீட் தேர்வு நடைபெறுவதையொட்டி, மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

ஒருநாள் கரோனா பாதிப்பில் 60% பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பில் 60 சதவிகிதம்  பாதிப்பு மகாராஷ்ரம், ஆந்திரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் கரோனா பாதித்த 1.44 லட்சம் பேரில் 1.30 லட்சம் பேர் குணமடைந்தனர்

 சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 1,44,595 பேரில், 1,30,831 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10,854 பேர் சிகிச்சையில் உள்ளனர். விரிவான செய்திக்கு..

பெங்களூரு: ஆம்புலன்ஸில் சென்ற பெண் 'கரோனா நோயாளி' மாயமானதில் திடீர் திருப்பம்

பெங்களூருவின் பொம்மனஹள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயதான சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கரோனா உறுதி செய்யப்பட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார். விரிவான செய்திக்கு..

சென்னையில் 10-க்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் கரோனா தொற்று

 சென்னையில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரிவான செய்திக்கு..

சென்னையில் மட்டும் 993 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,591 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் இன்று 5,584 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,584 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஆந்திரத்தில் 10,418, கர்நாடகத்தில் 9,540 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் கரோனா பலி 18 ஆயிரத்தைத் தாண்டியது!

ரஷியாவில் புதிதாக 5,218 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 142 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு...

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 553 காவலர்களுக்கு கரோனா: மேலும் 3 பேர் பலி

 மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 553 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 காவலர்கள் உயிரிழந்தனர்.

மோசமான பக்கவிளைவு: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையின் கரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்

 ஆஸ்ட்ராஜெனெகா கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலருக்கு விளக்கமுடியாத உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால், தடுப்பு மருந்து சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் கரோனாவில் இருந்து நலமடைவோர் விகிதம் அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி

 தமிழகத்தில் கரோனாவில் இருந்து நலமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளதாகவும், கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் குறைவாக இருப்பதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

'பாடுவதால் கரோனா தொற்று அதிகம் பரவும்'

 பாடுவதால் கரோனா தொற்று அதிகம் பரவும் என்றும், கரோனாவைக் கட்டுப்படுத்த பாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 11 ஆயிரம் பேர் கரோனா சிகிச்சையில்

 சென்னையில் கரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 90% ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 11,029 பேர் (8%) சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் 2,000 சிறு மருத்துவமனைகளை ஏற்படுத்த முடிவு: முதல்வர் பழனிசாமி

 தமிழகத்தில் அதிகளவில் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள வசதியாக, சுமார் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

நாட்டில் புதிதாக 75,809 பேருக்கு கரோனா; 1,133 பேர் உயிரிழப்பு

 நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,133 பேர் உயிரிழந்தனர். விரிவான செய்திக்கு..

கேரளத்தில் 1 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

 கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 3,026 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,131 பேருக்கு கரோனா: 380 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,131 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

உலகளவில் கரோனா பாதிப்பு 2.74 கோடியானது; பலி 8.96 லட்சம்

 உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.74 கோடியை எட்டியது.  இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.96 லட்சமாக உள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பாதித்த முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம்

 சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.2 லட்சம் நிவாரண நிதியை வழங்குவதில் தாமதம் நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரோனா தொற்று மையமாக ஸ்ரீஹரிகோட்டா: மேலும் 31 பேருக்கு தொற்று உறுதி

 சென்னை: சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் ஆந்திரத்தில் உள்ள சதீஷ் தவண் வான்வெளி ஆராய்ச்சி மையம், மற்றுமொரு கரோனா மையமாக உருவாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை 33 பேருக்கு, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை புதிதாக 31 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், 60 போ் தங்களது மாதிரிகளை, கரோனா பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனா். 

90 வயது மூதாட்டி குணமடைந்துவீடு திரும்பினாா்

 சென்னை: கரோனா பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினாா்.

சென்னையை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் பகுதியை சோ்ந்த 90 வயது மூதாட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சீகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு கரோனா பாதிப்பு இருந்ததை தெரியவந்தது. சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் இருந்ததால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மூதாட்டிக்கு தொடா்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவா் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினாா். அவரை சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் தேரணிராஜன் உள்ளிட்ட மருத்துவா்கள் வாழ்த்தி வழியனுப்பிவைத்தனா்.

சென்னையில் 988, பிற மாவட்டங்களில் 4,696 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் புதிதாக 4,696 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கரோனா: மேலும் 87 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT