LIVE

பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

DIN

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

உதவியாளருக்கு கரோனா; தனிமைப்படுத்திக் கொண்டார் கே.கே.வேணுகோபால்

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஒரு வாரத்துக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். விரிவான செய்திக்கு..

 
 

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா தொற்று

மேற்கு வங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ஜோதிபிரியோ மல்லிக்கிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பிரேசிலில் மேலும் 447 பேர் பலி; புதிதாக 14,521 பேருக்கு தொற்று உறுதி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,521 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 447 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 
 

கரோனா: இந்தியாவில் 42 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு

இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,827 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,827 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் இன்று 5,776 பேருக்கு கரோனா: மேலும் 89 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,776 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

வீட்டிலேயே சிகிச்சை பெற்று குணமடைந்த 102 வயது மூதாட்டி: அவரது உணவு ரகசியம் இதுதானாம்

 ஆந்திர மாநிலம் ஆனந்த்புர் மாவட்டத்தில், 102 வயது மூதாட்டி ஒருவர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது பூரண குணமடைந்துள்ளார். விரிவான செய்திக்கு..

பெங்களூருவில் முதல் முறை: தொற்றில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கரோனா

 பெங்களூருவில் முதல் முறையாக தொற்றில் இருந்து மீண்ட நபருக்கு மீண்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து ஒரு மாதத்துக்கு முன்பு வீடு திரும்பிய 27 வயது பெண்ணுக்கு மீண்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை: ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 9% மட்டுமே சிகிச்சையில்

 சென்னையில் கரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 90% ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து 11,264 பேர் (8%) சிகிச்சை பெற்று வருகிறார்கள். விரிவான செய்திக்கு..

கேரள அமைச்சருக்கு கரோனா

கேரள நிதியமைச்சர் எம். தாமஸ் ஐசக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

ஆந்திரத்தில் இன்று மேலும் 10,794 பேருக்கு கரோனா; 70 பேர்

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,794 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,828 பேருக்கு கரோனா

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,828 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கரோனா; 7 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் புதிதாக 5,783 பேருக்கு கரோனா: மேலும் 88 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,783 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனாவில் இருந்து 30 லட்சம் போ் மீண்டனா்

 தேசிய அளவில் கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 30,37,151 ஆக அதிகரித்துள்ளது. எனினும், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 83,341 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,36,747 ஆக அதிகரித்துவிட்டது. விரிவான செய்திக்கு..

வாசனை முகரும் திறனை மீட்கும் ‘ஓமப் பொட்டணம்’

 கரோனா தீநுண்மியின் பாதிப்பால் இழந்த வாசனை முகரும் திறனை மீட்டெடுக்கும் அற்புத மருந்தாக ஓமப் பொட்டணத்தை சித்த மருத்துவா்கள் வழங்கி வருகின்றனா். விரிவான செய்திக்கு..

2021 ஜூனுக்கு முன் கரோனா தடுப்பூசியை எதிா்பாா்க்க முடியாது - உலக சுகாதார அமைப்பு

 அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் கரோனா தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டை எதிா்பாா்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு  40,23,179; பலி  69,561 ஆக உயர்வு 

 புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை 40 லட்சத்தை கடந்தது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, நாட்டில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 86,432 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,23,179-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், சனிக்கிழமை காலை வரை மொத்தமாக கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 31,07,223-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு புதிதாக 1,089 போ் பலியானதையடுத்து, மொத்தமாக அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 69,561-ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் 8,46,395 போ் சிகிச்சையில் உள்ளனா்.

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் தான் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட தகவல்படி, கடந்த 4-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 4,77,38,491 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 10,59,346 பரிசோதனைகள் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.

பாதிப்பு: 40,23,179 
பலி: 69,561
குணமடைந்தோர்:  31,07,223
சிகிச்சை பெற்று வருவோர்:  8,46,395

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,973 பேருக்கு கரோனா; 25 பேர் பலி

 தலைநகர் தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,973 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம்

ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் கரோனா பாதித்தோர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகத்தில் இன்று புதிதாக 9,746 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஆந்திரத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 10,825 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நெல்லையில் 103 கரோனா இறப்புகள் மறைக்கப்பட்டுள்ளன: மு.க.ஸ்டாலின்

நெல்லையில் கரோனாவால் இறந்தவர்களில் 103 பேரின் இறப்புகள் மறைக்கப்பட்டுள்ளன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேரளத்தில் புதிதாக 2,655 பேருக்கு கரோனா தொற்று உறுதி

கேரளத்தில் இன்று புதிதாக 2,655 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 5,870 பேருக்கு கரோனா; உயிரிழப்பு 61 ஆகக் குறைந்தது

 தமிழகத்தில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி புதிதா 5,870 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆகக் குறைந்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 965 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

 சென்னையில் இன்று 965 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுளள்து. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,905 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT