LIVE

பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

DIN

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

தனிமைப்படுத்தலில் உலக சுகாதார நிறுவனத் தலைவர்

உடன் பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு; புதிதாக 1,123 பேருக்குத் தொற்று

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை 977 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்(ஞாயிற்றுக்கிழமை) 1,123 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

உலகளவில் கரோனாவிலிருந்து 3.37 கோடி பேர் மீண்டனர்

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.68 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3.37 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

இந்தியாவில் 82 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

கேரளத்தில் மேலும் 4,138 பேருக்கு கரோனா

 கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 4,138 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 671 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,810 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

முகக்கவசம் அணிவது கட்டாயம்: சட்டம் இயற்றும் ராஜஸ்தான் அரசு

 கரோனா பரவுவதைத் தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் மேலும் 18,257 பேருக்கு வைரஸ் தொற்று; 238 பேர் பலி

 ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,257 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்ப து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 16,55,038 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 238 பேர் உள்பட இதுவரை 28,473 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

இந்தியாவில் புதிதாக 46,964 பேருக்கு கரோனா; 470 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,964 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக 2,504 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,504 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் புதிதாக 7,025 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 7,025 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்

 சென்னையில் இதுவரை 1,99,916 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,651 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,89,074 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 7,191 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

உலகளவில் கரோனா பலி 12 லட்சத்தைக் கடந்தது!

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.63 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவால் 3.34 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

இந்தியாவில் 81 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

 நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 லட்சத்தைத் தாண்டியது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 48,268 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81,37,119-ஆக அதிகரித்தது. 

அதே கால அளவில், நாடு முழுவதும் 59,454 போ் தொற்றில் இருந்து குணமடைந்தனா். இதனால் கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 74,32,829-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றுக்கு மேலும் 551 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,21,641-ஆக அதிகரித்தது.  

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 6 லட்சத்தைவிட குறைந்துள்ளது. நாடு முழுவதும் 5,82,649 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு எதிரான பணி: மும்பை போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

 மும்பை காவல்துறையினரைப் பாராட்டுவதாகவும், அவா்களுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் மும்பை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா தடுப்பூசி விநியோகத்துக்காக தனிக் குழுக்கள்

 கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி மக்களிடம் விரைந்து கொண்டு சோ்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக தனிக் குழுக்களை அமைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது

 நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது, மொத்த பாதிப்பில் 7.35 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா். 91.15 சதவீதம் போ் குணமடைந்துவிட்டனா்.

தில்லியில் புதிதாக 5,062 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 5,062 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 2,511 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,511 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும கரோனா பரவல்: 5 லட்சத்தைத் தாண்டியது மொத்த பாதிப்பு

ஜெர்மனியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT