LIVE

பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

DIN

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பு 79 லட்சத்தைக் கடந்தது

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 79 லட்சத்தைக் கடந்துள்ளது. 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,961 பேருக்கு கரோனா

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,961 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் 1,901, கர்நாடகத்தில் 3,130 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் 4 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

 கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 4,287 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 17,347 ஆக உயர்வு! மேலும் 219 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் புதிதாக 17,347 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. ஒருநாளில் கரோனா உறுதி செய்யப்பட்டோரில் இதுவே அதிகமாகும். முன்னதாக 17,340 என்பது அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாக இருந்தது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் 90% பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்

 பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவிகிதம் பேர் சிகிச்சை பெற்று தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 


பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 707 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 328,602 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கரோனா

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு அறிகுறியற்ற கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

கேரளத்தில் இன்று மேலும் 6,843 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று புதிதாக 6,843 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

ரஷியாவில் புதிதாக 16,710 பேருக்கு கரோனா

ரஷியாவில் புதிதாக 16,710 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் இதுவரை 1,94,901 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,583 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,81,171 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 10,147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

முதல் முறையாக, இறந்த கரோனா நோயாளிக்கு உடற்கூராய்வு; காத்திருந்த அதிர்ச்சி

 பெங்களூரு: கரோனா பாதித்து உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை மிக எச்சரிக்கையோடு கையாண்டு நல்லடக்கம் செய்துவந்த நிலையில், பெங்களூருவில் முதல் முறையாக கரோனாவால் இறந்தவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதித்து பலியான ஒருவரின் உடல் 15 மணி நேரத்துக்குப் பின், தடயவியல் துறை நிபுணர் மருத்துவர் தினேஷ் ராவ், உடற்கூராய்வு செய்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர். விரிவான செய்திக்கு..

மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 28-ல் முதல்வர் ஆலோசனை

கரோனா பொது முடக்கத்தில் அடுத்தகட்டத் தளர்வுகள், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 28 ஆம் தேதி முதல்வர் எட்ப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். 

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், பின்னர், தமிழகத்தில் பொது முடக்கத்தில் அடுத்தகட்ட தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டில் கரோனா பாதிப்பு 78 லட்சத்தைக் கடந்தது: பலி 1,17,956 ஆக உயர்வு

 நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 78,14,682 ஆக உயர்ந்துள்ளது. 650 புதிய உயிரிழப்புகளுடன் உயிரிழந்தவர்ளிந் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,17,956 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 53,370 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 78,14,682-ஆக அதிகரித்தது.

அதே காலகட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 650 போ் உயிரிழந்தனா். நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,17,956-ஆக அதிகரித்தது. இது ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.51 சதவீதம் ஆகும்.

நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை: ஹர்ஷவர்தன்

 வரக்கூடிய பண்டிகை காலமும், குளிர்காலமும் தொற்று பரவலை அதிகரிக்க வாய்ப்பு உள்ள காலமாக பார்க்கப்படுவதால், நாட்டில் கரோனா கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.  விரிவான செய்திக்கு..

கேரளத்தில் இன்று மேலும் 8253 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 8253 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் இன்று மேலும் 4,471 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் இன்று மேலும் 4,471 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,107 பேருக்கு கரோனா

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 2,107 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா

 மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ஹைதராபாத்தில் கரோனாவுக்கு கணவர் பலி; மனைவி தற்கொலை

 கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கணவர் பலியான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார். விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 2,886 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 2,886 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஜெர்மனியில் 10 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

ஜெர்மனியில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT