LIVE

நிவர் புயல்: லைவ் அப்டேட்ஸ்

25th Nov 2020 10:33 AM

ADVERTISEMENT

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் புதன்கிழமை மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

Live Updates
03:53 Nov 25

தமிழகத்தில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் இடங்கள்

 தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர நிவர் புயல், கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. விரிவான செய்திக்கு..

03:52 Nov 25

பல கிலோ மீட்டர் தொலைவில் தீவிர நிவர் புயல்; வெள்ளக்காடாக சென்னை

 சென்னையிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் தீவிர நிவர் புயலானது மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. விரிவான செய்திக்கு..

03:36 Nov 25

கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் ஆய்வு; மக்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

கனமழை பெய்து வரும் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை நேரில் சந்தித்து தேவையான உணவுப்பொருள்களை வழங்கி வருகிறார். விரிவான செய்திக்கு..

03:35 Nov 25

சென்னையிலிருந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து

நிவர் புயல் காரணமாக சென்னையிலிருந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

03:34 Nov 25

அடையாற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்: மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்

அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

 
12:04 Nov 25

நிவர் புயல் எதிரொலி

ராணிப்பேட்டை  மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் 4,633 பேர் மீட்டு பாதுகாப்பாக தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
ராணிப்பேட்டை மாவட்டத்தில்  மீட்புப் பணிக்காக 600 போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட எஸ்.பி. ஆ.மயில் வாகனன் தகவல் தெரிவித்துள்ளார்.
10:43 Nov 25

நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் மதியம் 12 மணிக்கு ஏரியிலிருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

10:42 Nov 25

தீவிரப் புயலாக மாறிய நிவர் நாளை அதிகாலை கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், நாளை காலை வரை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

10:41 Nov 25

நிவர் புயலை எதிர்கொள்ள இந்திய காவல்படை, கடலோர காவல்படை தயார்

நிவர் புயலால் எற்படும் விளைவுகளை சமாளிக்கவும், பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் கடலோர காவல்படையும், இந்திய கடற்படையும் தயார் நிலையில் உள்ளன. 

10:40 Nov 25

நிவர் புயல்: தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் - ராணுவம் அறிவிப்பு

நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரியில் பாதிப்பு  ஏற்பட்டால் உதவுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 
 
10:40 Nov 25

கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

‘நிவா்’ புயலையொட்டி கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. 

10:39 Nov 25

நிவர் புயல்: தயார் நிலையில் 22 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்

 நிவர் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரத்தில் 22 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 

10:39 Nov 25

நிவர் புயலை எதிர்கொள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆயத்தம்

சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையம், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. 

10:38 Nov 25

தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை: முதல்வா் பழனிசாமி

தமிழகம் முழுவதும் புதன்கிழமை (நவ. 25) அரசு பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். விரிவான செய்திக்கு..

10:37 Nov 25

நிவர் புயல் அச்சம்: காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஊரடங்கு!

நிவர் புயல் காரணமாக காரைக்காலில் புதன் காலை 6 மணி முதல் 24 மணி நேரத்திற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், புதுச்சேரியில் 26-ம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

10:37 Nov 25

புதுச்சேரியில் இன்று கரையைக் கடக்கிறது புயல்? 145 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று

வங்கக் கடலில் உருவாகியுள்ள "நிவர்' புயல் புதுச்சேரியில் புதன்கிழமை (நவ.25) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் 145 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Tags : nivar cyclone
ADVERTISEMENT
ADVERTISEMENT