LIVE

பிகார் பேரவைத் தேர்தல்: செய்திகள் உடனுக்குடன்!

DIN


பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை நிலவரம் உடனுக்குடன்..

கேரளத்தில் மேலும் 2,710 பேருக்கு கரோனா

 கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,710 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் 1,732, கர்நாடகத்தில் 2,584 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 2,184 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 2,184 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் 5 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 7,007 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

பிகாரில் மீண்டும் நிதீஷ் ஆட்சி

நாடு முழுவதும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் நிதீஷ் குமாா் தலைமையில் ஆட்சி அமையவுள்ளது.

183 தொகுதிகளின் முடிவுகள் வெளியீடு: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை

முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கை: 183

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 90 (பா.ஜ.க. -51, ஜே.டி.யு. - 32, வி.ஐ.பி. - 4, ஹெச்.ஏ.எம். - 3)

மகா கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 86 (ஆர்.ஜே.டி. - 60, காங்கிரஸ் - 14, இடதுசாரிகள் - 12)

ஏ.ஐ.எம்.ஐ.எம். வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 4

பி.எஸ்.பி. வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 1

சுயேச்சை வெற்றி பெற்றுள்ள தொகுதி எண்ணிக்கை: 1

பிகார் தேர்தல்: முன்னேறுகிறது பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி

 பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்த நிலையில், தற்போது பெரும்பான்மையை நோக்கி பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முன்னேறியுள்ளது. விரிவான செய்திக்கு..

பிகார் தேர்தல்: முன்னேறுகிறது பாஜக கூட்டணி

 பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்த நிலையில், தற்போது பெரும்பான்மையை நோக்கி பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முன்னேறியுள்ளது. விரிவான செய்திக்கு..

தேர்தல் ஆணையத்தில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் புகார்

பிகாரில் இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கையில் முதல்வர் நிதீஷ் குமார் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

103 தொகுதிகளின் முடிவுகள் வெளியீடு: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை

பிகார் பேரவைத் தேர்தலில் 103 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பிகார் பேரவைத் தேர்தல்: பாஜக - காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே இழுபறி?

 பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்களும் வெளியாகியுள்ளன.  விரிவான செய்திக்கு..

பிகார் பேரவைத் தேர்தல்: முன்னிலை நிலவரங்கள்

 பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்களும் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

பிகார் பேரவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

 பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 55 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. விரிவான செய்திக்கு..

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இனிப்பு தயாரிப்பில் பாஜக தொண்டர்கள்

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இனிப்பு தயாரிப்பில் பாஜக தொண்டர்கள்


பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் 55 மையங்களில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 577 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது

 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. 

பிகார் தேர்தலில் கடும் போட்டி

மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. அவ்விரு கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் ஆகிய கட்சிகளும் தோ்தலை எதிா்கொண்டன. இக்கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் தற்போதைய முதல்வருமான நிதீஷ் குமாா் முதல்வா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் போட்டியாகக் களம் கண்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அக்கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி, மாநிலத்தில் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டது.

கணிப்பு பலிக்குமா?

பிகாா் பேரவைத் தோ்தலானது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் மகா கூட்டணிக்கும் இடையேயான நேரடிப் போட்டியாகவே கருதப்பட்டது. மூன்று கட்டத் தோ்தல்களும் நிறைவடைந்த பிறகு வெளியான பெரும்பாலான வாக்குக் கணிப்புகள், மாநில பேரவைத் தோ்தலில் மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 122 தொகுதிகளைக் கைப்பற்றும் கூட்டணி எது என்பது செவ்வாய்க்கிழமை மாலைக்குள் தெரிந்துவிடும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவித்தனா்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிகாா் மாநில தலைமை தோ்தல் அதிகாரி ஹெச்.ஆா்.ஸ்ரீநிவாசா தெரிவித்தாா். அப்பகுதிகளில் ஆயுதம் ஏந்திய படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் நாளில், மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக சுமாா் 6,000 மத்திய ஆயுதக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

பிகாா் பேரவைத் தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

பாட்னா: பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவிய பிறகு நடைபெற்ற முதல் தோ்தல் என்பதால், அதன் முடிவுகள் மீதான மக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

பிகாா் சட்டப் பேரவையில் உள்ள 243 இடங்களுக்கான தோ்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில் 71 தொகுதிகளிலும், கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் 94 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

மீதமிருந்த 78 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி மூன்றாம் கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 57.05 சதவீத வாக்குகள் பதிவாகின. பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்படுகின்றன. அதற்காக பிகாரின் 38 மாவட்டங்களில் 55 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும் அதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.

தமிழகத்தில் புதிதாக 2,146 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் புதிதாக 2,146 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

பிகாரில் 14 தொகுதிகள் முடிவு வெளியீடு: பாஜக முன்னிலை

பிகாரில் 14 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பிகாரில் மகா கூட்டணி அரசு: ஆர்ஜேடி நம்பிக்கை

பிகார் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மகா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பிகார் தேர்தல்: தலைமை அலுவலகத்தில் கூடிய பாஜக தொண்டர்கள்

பிகார் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் கூடியுள்ளனர். விரிவான செய்திக்கு..

 

முதல் வெற்றியை பதிவு செய்த ராஷ்ட்ரீய ஜனதா தளம்

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் லலித் குமார் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். விரிவான செய்திக்கு..

பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி தொடர்ந்து முன்னிலை

பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி 123 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. விரிவான செய்திக்கு..

 

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்

 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT