LIVE

அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

20th Aug 2020 09:37 AM

ADVERTISEMENT


கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

Live Updates
09:47 Aug 20

இந்தியாவில் கரோனா பாதிப்பு 28 லட்சத்தை கடந்தது: பலி 53,866 ஆக அதிகரிப்பு

 

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 69,652 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 28 லட்சத்து 36 ஆயிரத்து 926 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 53,866 -ஆக அதிகரித்தது. 
 
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 69,652 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 977 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 53,866 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நோய்த்தொற்றுக்காக 6,86,395 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,96,665 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT