மக்களவைத் தேர்தல் 2019: மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக; தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்! 

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் 2019: மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக; தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்! 

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 542 தொகுதிகளில் மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 339 மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் 90 மக்களவைத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 3வது ஆணியில் உள்ள கட்சிகள் 113 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

மக்களவைத் தேர்தலுடன் ஒடிஸா, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல் முறையாக இந்த தேர்தலில் தான் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்பட்டு சரிபார்க்கப்பட உள்ளன.

எங்களுடன் இணைந்திருங்கள். செய்திகள் உடனுக்குடன்

செய்தி ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடியின் தாய்

பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக தலைமையிலான மோடி கூட்டணிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். உங்களுடன் இணைந்து பணியாற்ற மகிழ்ச்சியோடுமக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக தலைமையிலான மோடி கூட்டணிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். உங்களுடன் இணைந்து பணியாற்ற மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

20 ஆயிரம் தொண்டர்களுக்கு திடீர் அழைப்பு விடுத்திருக்கும் பாஜக தலைமை

இந்த நிலையில் சுமார் 20 ஆயிரம் பாஜக தொண்டர்கள் இன்று மாலை புது தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வருமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
வெற்றியைக் கொண்டாடும் வகையில் இன்று கட்சி அலுவலகத்துக்கு வரும் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்புக் கொடுக்க கட்சித் தலைமை திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காகவே 20 ஆயிரம் பாஜக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் தொண்டர்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தை முழுமையாக ஆக்ரமிக்கிறது பாஜக

டேஹ்ராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 5 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.
குறைந்தபட்சம் 60 ஆயிரம் வாக்குகள் முதல் 1.25 லட்சம் வாக்குகள் வரை தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

ராஜினாமா கடிதம் எழுதும் ஆந்திர முதல்வர்

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார்

வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனே இரண்டாவது முறையாக பிரதமர் பதவி: மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து

முதன்முறை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு நன்றி: ஓபிஎஸ்-இபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் எங்களது நெஞ்சார்ந்த நன்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை: ராமதாஸ் ஆறுதல்

நாடாளுமன்றத் தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை என்று பாமக தொண்டர்களுக்கு அதன் நிறுவனர் ராமதாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை: ராமதாஸ் ஆறுதல்

நாடாளுமன்றத் தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை என்று பாமக தொண்டர்களுக்கு அதன் நிறுவனர் ராமதாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியிலும் எனக்கு ஒரே ஒரே கவலைதான்: எதைச் சொல்கிறார் ஸ்டாலின்?

ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருந்தும் தலைவர் கலைஞர் இருந்து இதனை பார்க்கவில்லையே என்ற கவலைதான் என்னை வாட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனே இரண்டாவது முறையாக பிரதமர் பதவி

முதன்முறை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது

தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு தந்துள்ளனர்

இந்த தேர்தலில் நாடு வென்றுள்ளது, நாட்டு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்

நாங்களும் எங்கள் கூட்டணி கட்சிகளும் இந்த பிரமாண்ட வெற்றியை மக்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்

130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

பாகுபலி.. பாகுபலி.. என்ற சினிமா காட்சியை நினைவுபடுத்திய புகைப்படம்

ராகுல் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: ஜெகன்மோகன் ரெட்டி

காங்கிரஸ் தலைவர் ராகுலைப் பொருத்தவரையில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தங்களுடைய நம்பகத்தன்மையைப் பெற்றவரைத் தான் மக்கள் தேர்வு செய்வார்கள். அதுபோன்று தான் எங்களை தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நம்பகத்தன்மை இல்லாதவர்களை மக்கள் தூக்கி வீசிவிட்டனர். விரைவில் நான் ஆந்திர முதல்வராக பதவியேற்க ஒரு நன்நாளை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.

மகத்தான வெற்றிக்கு இடையேயும் பாஜகவை அண்ட விடாத மாநிலங்கள் எது தெரியுமா?

சில மாநிலங்களில் ஒட்டுமொத்த தொகுதிகளிலும் வெற்றி பெற்று இதர கட்சிகளுக்கு வாய்ப்பே அளிக்காமல் இருந்துள்ள அதிசயமும் நிகழ்ந்துள்ளது.இந்த நிலையில், இந்தியாவில் ஒரு தொகுதிகளைக் கூட பெற முடியாத இரண்டு மாநிலங்களும் உள்ளன. அதில் ஒன்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழகம் தான். மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 29 தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக முன்னிலையில் உள்ளது. இதேப்போல நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலும், மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி முகம் காட்டுகிறது. இடையே தெலுங்கு தேசம் கட்சிக்கு இடையே 6 தொகுதிகளில் இழுபறி நீடித்தாலும் பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

டிவிட்டரில் 'சவ்கிதார்' பட்டத்தை நீக்கிய மோடி!

தற்போது 'சவ்கிதார்' என்னும் உணர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நேரம் வந்து விட்டது. அந்த உணர்வை எப்போதும் உயிர்ப்பாக வைத்திருந்து, தேசத்தின் வளர்ச்சிக்கான சேவையைத் தொடருங்கள். 'சவ்கிதார்' என்னும் சொல் இப்போது எனது ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கப்படுகிறது. ஆனால் அது எனது ஒருங்கிணைந்த பகுதியாக மாறி விட்டது. நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுந்து நிற்போம்: டிடிவி தினகரன்

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுக தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு எழுந்து நிற்போம் என்று டிடிவி தினகரன் டிவீட் செய்துள்ளார்.

மோடி ஆட்சி 2.0! பாஜகவுக்கு அள்ளிக் கொடுத்த மாநிலங்கள்!

மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
மோடியின் 2.0 ஆட்சிக்கு இந்திய மக்கள் ஏகோபித்த ஆதரவை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வாகவிருக்கும் 3 பெண்கள்


தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று 3 பெண்கள் மக்களவைக்கு தேர்வாகவிருக்கிறார்கள்.

அவர்கள்..
தூத்துக்குடி - கனிமொழி
தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
கரூர் - ஜோதிமணி

நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இதில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.முன்னாள்  மத்திய அமைச்சரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் தியாகராஜனை  விட 2,05,357 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இதில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.முன்னாள்  மத்திய அமைச்சரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் சாம் பாலை  விட 33,454 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஆத்ம பரிசோதனை செய்யும் நேரம் இது; மக்கள் தவறு செய்துவிட்டார்கள்: தமிழிசை

தமிழகத்தில் பாஜகவை ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். தூத்துக்குடியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே வேட்பாளராக நின்றேன். மக்கள் தவறு செய்துவிட்டார்கள். மோடிக்கு வாக்களித்திருந்தால் பல நன்மைகள் கிடைத்திருக்கும். தற்போது மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது ஊழல் குற்றச்சாட்டு உடைய ஒருவரை.

தேர்தல் முடிவுகளை கவனிக்கும் பொதுமக்கள்

நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தெற்கு பெங்களூர் தொகுதியில் தேஜஸ்வி வெற்றி

இப்போதைய முன்னணி நிலவரம் என்ன?

மொத்தமுள்ள 542 தொகுதிகளில் இதுவரை 6 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. அதில் பாஜக 5 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
அந்த 5 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்ட வாராணசி, அமித் ஷா போட்டியிட்ட காந்திநகர் உள்ளிட்டவை அடங்கும்.
மீதமுள்ள 536 தொகுதிகளில் பாஜக 294 தொகுதியிலும், காங்கிரஸ் 50 தொகுதியிலும், திரிணாமூல் காங்கிரஸ் 23 தொகுதியிலும், திமுக 23, சிவ சேனை 18, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 23, பிஜேடி 14, ஐக்கிய ஜனதா தளம் 15, பகுஜன் சமாஜ் 11 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

நவம்பரில் பலசாலி.. டிசம்பரில் பின்னடைவு.. மே மாதம் வாழ்த்து: மோடி குறித்து ரஜினி

17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சுமார் 350 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வெற்றி 

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டார்.

தற்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மோடி சர்க்காரை உருவாக்கிய மக்களுக்கு அமித்ஷா வாழ்த்து 

மோடி சர்க்காரை உருவாக்கிய மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர்  அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாவது: இந்திய மக்கள்பெரும்பான்மை தீர்ப்புக்கு அடிபணிந்து 'மோடி சர்க்காரை' உருவாக்கியுள்ளனர். இந்த அரசானது மக்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கைக்கும், வரலாறு காணாத வளர்ச்சிக்கு அடையாளமாகும். சக குடிமக்களுக்கு வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது: மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி

இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாவது:
ஒன்றிணைந்து நாம் வளர்வோம்
ஒன்றிணைந்து நாம் செழிப்படைவோம்
ஒன்றிணைந்து நாம் வலிமையான மற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்த இந்தியாவை உருவாக்குவோம்.
இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.  #இந்தியாவுக்கு வெற்றி
இவ்வாறு அவர் பதிவிட்டுளளார்.

இது காங்கிரஸின் தோல்வி மட்டுமல்ல, 'காவலாளி திருடன்' என்ற கோஷத்துக்குமானது

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் தோல்வி அடைந்து தனது செயல்பாடுகளை மறுசீராய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
இது பற்றி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த, இன்று மாலை கட்சி அலுவலகத்துக்கு காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் வருகை தர உள்ளனர்.
2014ம் ஆண்டைக் காட்டிலும், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 542 தொகுதிகளில் ஏறக்குறைய 350 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது பாஜக.

தென்னிந்தியாவின் ஒரு மாநிலத்தில் வெற்றிக்கொடி நாட்டியது பாஜக

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி கூட்டணியை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜக முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் 24 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
வெற்றி வாகைச் சூடிய பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன பிரதமர் வாழ்த்து
மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி: மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து

மோடிக்கு அனுப்பிய கடிதம்

சிதம்பரம் தொகுதி வேட்பாளர் தொல் திருமாவளவன் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து

பிரதமர் மோடிக்கு இந்திய மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்திருப்பது மக்களவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைக்கவிருக்கும் பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சி என்ற தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
வாராணசி தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் பிரதமர் மோடி

அமேதியில் பின் தங்குகிறார்; வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார் ராகுல்

அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி, ராகுலை விட 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com