உடல் நலம்

உடல் எடையைக் குறைக்கும் உலர் திராட்சை! இதர பயன்கள்?

1st Jan 2022 05:06 PM

ADVERTISEMENT

உலர் திராட்சை பெரும்பாலாக கருப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துகள் உள்ளன. 

உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பொதுவாக அனைத்து வகையான நட்ஸ்களையும் நீரில் ஊறவைத்து சாப்பிடலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

மாறாக, உலர் திராட்சையை அப்படியேவும் சாப்பிடலாம். 

உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: 

ADVERTISEMENT

♦ கருப்பு திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் அதனை யார் வேண்டுமானாலும் தொடர்ந்து சாப்பிடலாம். மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளும் குறையும். 

♦ மலச்சிக்கல் இருப்பவர்கள் உலர் திராட்சையை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் திராட்சையை மசித்து சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். 

♦ ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் இதனை சாப்பிடும்பட்சத்தில் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும். 

♦ உடல் சூடாகவே இருப்பதாக உணர்பவர்கள் அல்லது உடல் சூட்டைத் தணிக்க உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடலாம். 

♦ சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் காலையில் வெறும் வயிற்றில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையுடன் தண்ணீர் அருந்த வேண்டும். 

♦ மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்டப் பிரச்னைகளை சரிசெய்ய இது உதவும். 

♦ எலும்பு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யவும் எலும்புகளின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு உலர் திராட்சை சாப்பிடுங்கள். நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு தீர்வாக இருக்கும். 

♦ இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். 

♦ மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிட்டுவர காமாலை நோய் குணமாகும். 

இதையும் படிக்க | மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT