உடல் நலம்

தலைவலி, சளி, இருமலைப் போக்க...

DIN

ஒற்றைத் தலைவலியைப் போக்க..

துளசி இலை சிறிதளவு எடுத்துக்கொண்டு அத்துடன் சுக்கு, லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சிறிது நேரத்தில் தலைவலி குணமாகி விடும். 

தொண்டைக் கரகரப்புக்கு..

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டைக் கரகரப்பு குணமாகும்.

நெஞ்சுச் சளி சரியாக..

தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சுட வைக்க வேண்டும். இப்போது அந்த எண்ணெயை நெஞ்சில் தடவ சளி குறையும். 

இரவு நேரத்தில் பாலுடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட நெஞ்சுச் சளி குறையும். 

மூக்கடைப்புக்கு..

நீரில் சுக்கை போட்டு சிறிது நேரம் கொத்தித்த பின்னர் அத்துடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மூக்கடைப்பு சரியாகிவிடும். 

நெல்லிக்காய்ச் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குடித்துவர மூக்கடைப்பு குறையும். 

வறட்டு இருமல் சரியாக..

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும்.

பொதுவாக மிளகு, மஞ்சள், தேன் ஆகியவற்றை ஏதேனும் ஒருவகையில் எடுத்துவர சளி, இருமல், மூக்கடைப்பு வராது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT