உடல் நலம்

'ஆயில் புல்லிங்' செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

22nd Mar 2021 12:51 PM

ADVERTISEMENT

 

சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி ஊற்ற வேண்டும். இப்போது பற்களின் இடையில் படும்படி நன்கு கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்து உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும்போது கொப்பளித்துவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். 

ஆயில் புல்லிங் பொதுவாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை எழுந்தவுடன் இதனைச் செய்வது நலம். 

 'ஆயில் புல்லிங்' செய்வதனால் ஏற்படும் பலன்கள்: 

ADVERTISEMENT

ஆயில் புல்லிங் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பற்கள், ஈறுகள் உறுதியாகும். பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்னைகளும் சரியாகிவிடும். 

நன்றாக பசி எடுக்கும். செரிமான பிரச்னைகள் வராது

அமைதியான நல்ல உறக்கம் கிடைக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். 

வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேற்றப்படும். வாய் துர்நாற்றம் இருக்காது.

உடல் சூடு தணியும். 

ஒற்றை தலைவலி, சைனஸ், தைராய்டு, தோல் வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். 

சருமம் பொலிவு பெற்று முக அழகைக் கூட்டும்.

 

Tags : lifestyle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT