உடல் நலம்

தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

3rd Dec 2021 11:37 AM

ADVERTISEMENT

காலையில் எழுந்தவுடன் அன்றைய நாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரும் நினைக்கக்கூடியதுதான். காலை நேரத்தில் ஒரு டீ அல்லது காபி குடித்தால்தான் அடுத்த வேலை என்று இருப்பவர்கள் ஏராளம். 

ஆனால், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் லெமன் வாட்டர்(எலுமிச்சை நீர்) குடித்தால் வழக்கத்திற்கு மாறாக புத்துணர்ச்சி கிடைக்கும், உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் பானம். 

செய்ய வேண்டியது: 

ஒரு டம்ளர் நீரை கொதிக்கவைத்து அதில் ஒரு எலுமிச்சையை இரண்டாகவோ அல்லது துண்டுதுண்டுகளாகவோ நறுக்கி போடவும். சிறிது நேரம் கழித்து ஆறியவுடன் வெதுவெதுப்பான பதத்தில் குடிக்க வேண்டும். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன?

நன்மைகள்: 

♦ எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் இ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துகள் உள்ளன. 

♦ முதலில் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது உடலில் நீரேற்றத்தை அளிக்கிறது.

♦ சிறுநீரகப் பிரச்னைகளை சரிசெய்கிறது. சிறுநீரகத்தில் கல் பிரச்னை உள்ளவர்கள் தினமும் காலை லெமன் வாட்டர் குடிப்பது நல்லது. 

♦ உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. 

♦ வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

♦ சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. இதனால் சருமம் பளபளப்பாக இருக்கும். 

♦ காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் அதற்கு முன்னதாக லெமன் வாட்டர் குடித்துவிட்டு செய்வது நல்ல பலன்களைத் தரும். 

♦ எடை இழப்புக்கு உதவுவதுடன் நீரிழிவு நோயைத் தடுக்க பயன்படுகிறது. 

♦ வயிற்றுப் பிரச்னைகளை சரிசெய்து செரிமானத்தைத் தூண்டுகிறது. 

♦ ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. 

♦ வழக்கத்தைக் காட்டிலும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். மனநலம் மேம்படும்.

♦ ஒட்டுமொத்தத்தில் இளமையுடன் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு டம்ளர் லெமன் வாட்டர் அருந்துங்கள். 

இதையும் படிக்க | உடற்பயிற்சிக்கும் மனநலனுக்கும் என்ன தொடர்பு?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT