பயணம்

ஆகஸ்ட் 27 முதல் பெங்களூர்-கோவை-பெங்களூர் தினசரி விமான சேவை தொடக்கம்

21st Aug 2020 05:31 PM

ADVERTISEMENT

அலைன்ஸ் விமான நிறுவனம் கோவையில் இருந்து பெங்களூருக்கு ஆகஸ்ட் 27 முதல் விமான சேவை தொடங்கவுள்ளது.

இதுகுறித்து அலைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

 கோவையில் இருந்து பெங்களூருக்கு ஆகஸ்ட் 27 முதல் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாள்களில் 70 பேர் அமர்ந்து செல்லும் விமானம் இயக்கப்பட உள்ளது.

இந்த தினசரி விமானமானது பெங்களூரிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு காலை 8 மணிக்கு வந்தடையும். கோவையிலிருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு காலை 8.55 மணிக்கு சென்றடையும்.

ADVERTISEMENT

ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் பெங்களூரிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு காலை 8 மணிக்கு வந்தடையும். கோவையிலிருந்து காலை 8.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு காலை 9.25 மணிக்கு சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Flight
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT