டூத்பேஸ்ட் மேஜிக்... பல் துலக்க மட்டுமல்ல, இப்படியும் பயன்படுத்தலாம்!

டூத்பேஸ்டை பல் துலக்க மட்டுமே பயன்படுத்தி வருபவர்களுக்கு அதனுடைய வேறு சில பயன்களையும் கற்றுத்தரப் போகிறோம்
டூத்பேஸ்ட் மேஜிக்... பல் துலக்க மட்டுமல்ல, இப்படியும் பயன்படுத்தலாம்!

டூத்பேஸ்டை பல் துலக்க மட்டுமே பயன்படுத்தி வருபவர்களுக்கு அதனுடைய வேறு சில பயன்களையும் கற்றுத்தரப் போகிறோம் இப்போது.

டூத்பேஸ்டை பயன்படுத்தி நகங்களைச் சுத்தம் செய்யலாம்...

பெடிக்யூர் செய்து கொள்ள நீங்கள் பார்லருக்குச் செல்கிறீர்கள், அங்கு நகங்களைச் சுத்தம் செய்ய ஏதோ ஒரு க்ரீமை அப்ளை செய்வார்கள். அது என்ன க்ரீம் என்று பெரும்பாலும் நமக்குத் தெரியாது. கிட்டத்தட்ட அது டூத்பேஸ்ட் போலத்தான் இருக்கும்.

ஒரு டீஸ்பூன் டூத் பேஸ்டுடன் கால் எலுமிச்சையைப் பிழிந்த ரசத்தைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். பிறகு அதை நகங்களில் அப்ளை செய்து 5 நிமிடங்கள் ஊற விட்டு டூத்பேஸ்ட் காய்ந்ததும் மெல்லிய பிரிஸ்டில்ஸ் கொண்ட சாஃப்டான டூத் பிரஸ் மூலமாகத் மிருதுவாகத் தேய்த்துக் கழுவவும். இப்போது பாருங்கள் நகங்கள் பொலிவுடன் மின்னும்.

ஸ்க்ராட்ச் ஆகி பயன்படுத்த முடியாமல் பாழாகி விட்ட சி டி, டி வி டி டிஸ்க்குகளைச் சரி செய்ய டூத்பேஸ்ட்...

உங்களிடம் பழையதாகிப் போன ஸ்க்ராட்ச் விழுந்த அனேகம் சி டி க்கள் மற்றும் டி வி டிக்கள் இருப்பின் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற வருத்தம் இனி தேவையில்லை.

ஸ்க்ராட்ச் விழுந்த டிவிடிக்களின் மீது ஒரு மெல்லிய கோட்டாக டூத் பேஸ்ட்டை அப்ளை செய்து பின்னர் டிஸ்யூ பேப்பர் அல்லது ஸ்பாஞ்சினால் நன்கு துடைத்து எடுத்து விட்டால் போதும். சி டி மற்றும் டி வி டி க்கள் மீண்டும் பழைய மாதிரி பொலிவு பெறுவதோடு நன்கு இயங்கவும் தொடங்கி விடும்.

நனைந்த தீக்குச்சிகளை மீண்டும் எரியத் தகுந்ததாக மாற்ற டூத்பேஸ்ட்....

குளிர் மற்றும் மழைக்காலங்களில் தீக்குச்சிகள் நமத்துப் போய் முனையில் இருக்கும் மருந்து நசிந்து எரியத் தகாததாக மாறிப் போகும். அப்போது தீக்குச்சிகளை டூத் பேஸ்ட்டில் நனைத்து சற்று நேரம் காய வைத்துப் பின் துடைத்து தீப்பெட்டியில் உரசிப் பார்த்தீர்களானால் தெரியும்.

உடனே பற்றிக் கொண்டு எரியத் தொடங்குவது. நீங்களும் உங்கள் வீட்டில் இந்த முறையைப் பின்பற்றிப் பாருங்கள்.

காய்கறி நறுக்கும் போது கைகளில் தொற்றிக் கொள்ளும் வாசத்தைப் போக்க டூத்பேஸ்ட்....

சிலருக்கு பூண்டு, வெங்காய நாற்றம் பிடிப்பதில்லை. அவர்கள் காய்கறி நறுக்கி சமைத்து முடித்த பின்பும் கைகளில் பூண்டு. வெங்காய நாற்றம் மறையமாட்டேனென்கிறதே என்று வருந்துகிறீர்களா?

எனில் வெங்காயம் நறுக்கி முடித்ததுமே கைகளில் துளி டூத் பேஸ்ட்டைப் பிதுக்கி நன்கு தேய்த்துக் கழுவிப் பாருங்கள் நாற்றம் போயே போச்சு.

மொபைல் ஃபோன் ஸ்க்ராட்ச் களையும் டூத்பேஸ்ட் மூலமாக நீக்கலாம்...

மொபைல் ஃபோன் திரை மற்றும் பின்புற கேமரா பகுதிகளில் ஸ்க்ராட்ச்கள் இருக்கின்றனவா? ஃபோன் பயன்படுத்தும் போதெல்லாம் உங்களுக்கு அந்த ஸ்க்ராட்ச்கள் அசெளகர்யமாக இருக்கிறதா? எடுங்கள் துளி டூத்பேஸ்ட்டை... எடுத்து மொபைல் திரை மற்றும் பின்புற, முன்புறை கேமரா திரைகளில் அப்ளை செய்து மெல்லிய ஸ்பாஞ்ச் அல்லது டிஸ்யூ கொண்டு துடைத்து எடுங்கள். அப்புறமென்ன ஃபோன் மீண்டும் புதுசு போலப் பளபளக்கும் அவ்வளவு தான்.

Image courtesy: YOUTUBE
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com