தொழில்நுட்பம்

கிண்டில் 'அளவில்லா சந்தா' பற்றிய விவரங்களுக்கு

29th Jul 2022 04:13 PM

ADVERTISEMENT


புத்தக விரும்பிகளுக்கு கிண்டில் சேவை என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். கிண்டில் எனப்படும் எண்ம புத்தகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் ஏராளமான ஆடியோ வடிவிலான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த கிண்டில் சேவையில் அளவில்லா சந்தா பெற பல்வேறு வகைகள் உள்ளன. ஒரு மாதம், 6 மாதங்கள், 12 மாதங்கள் என முறையே ரூ.199, ரூ.999, ரூ.1,799 என செலுத்தி அளவில்லாமல் புத்தகங்களைப் படிக்கலாம். 

இதையும் படிக்க.. அர்பிதா முகர்ஜி வீடா அல்லது அலி பாபா குகையா? வியக்கும் அதிகாரிகள்

குறிப்பிட்ட அளவிலான நேரத்துக்கு மட்டும் படிக்க தற்போது ஒரு மாதத்துக்கு ரூ.169 செலுத்தும் வாய்ப்பும் உள்ளது. இந்த மாதச் சந்தாவைப் பெறுவோருக்கு 30 நாள்கள் இலவச சேவையும் வழங்கப்படுகிறது. கிண்டில் சேவையை ஆன்டிராய்டு, ஐஓஎஸ் உள்ளிட்ட அனைத்து வகையான செல்லிடப்பேசிகளிலும் பெறலாம்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT