தொழில்நுட்பம்

சீனாவை புறக்கணிக்கும் அமேஸான் கிண்டில்.. காரணம் என்ன?

29th Jul 2022 04:11 PM

ADVERTISEMENT

 

அமேஸான்.காம் நிறுவனம், சீனத்திலிருந்து கிண்டில் எண்ம புத்தக வணிகத்தை நிறுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்தவில்லை.

முன்னதாக, சீனாவில் தனக்கான மிகப்பெரிய வணிகம் சிறப்பாக இருப்பதாகவும், அந்நாட்டில் வளரும் தலைமுறையினர் எண்ம முறையில் படிக்கும் ஆர்வத்தைக் கொண்டிருப்பது அதிகரித்திருப்பதாகவும் அமேஸான் கூறியிருந்தது. ஆனால், திடீரென இப்படி சீனாவை புறக்கணிக்க அமேஸான் முடிவெடுக்க என்ன காரணம் என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.

அமேசானின் கிண்டில் எனப்படும் எண்ம புத்தக வணிகம் நிறுத்தப்படுவது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஏற்கனவே கிண்டில் சாதனங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் கிண்டில் சீனா இ-புத்தகக்கடை சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால், கிண்டில் செயலியானது, இன்னும் ஓராண்டுகள் கூடுதலாக பயன்பாட்டில் இருக்கும். ஏற்கனவே வாங்கிய இ-புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்க பயனாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  ஆனால், 2024ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு சீனாவில் கிண்டில் சாதனங்களிலிருக்கும் புத்தகங்களைப் படிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT