தொழில்நுட்பம்

லெனோவா நிறுவனத்தின் புதிய மடிக்கணினி அறிமுகம்

24th Nov 2021 05:20 PM

ADVERTISEMENT

லெனோவா நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஏஐஓ520 மடிக்கணினியை சீனாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் தொடர்ந்து தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள லெனோவா நிறுவனம் தன் அடுத்த தயாரிப்பை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க | இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிவு

லெனோவா ஏஐஓ520 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினி சில சிறப்பம்சங்களுடன் இந்திய மதிப்பில் ரூ.64,000க்கு சந்தைக்கு வந்திருப்பதால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

ADVERTISEMENT

லெனோவா ஏஐஓ520 சிறப்பம்சங்கள்:

*23.8 இன்ச் எச்டி திரை 

*கோர் ஐ5

*16ஜிபி ரேம் , 512ஜிபி கூடுதல் நினைவகம்

*இண்டெல் 11 ஜெனரெஷன் கோர் ஐ5-11320டிடி பிராசசர்

*எம்எக்ஸ்450

மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

Tags : laptop Lenovo
ADVERTISEMENT
ADVERTISEMENT