தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம் அறிமுகம்

16th Dec 2021 03:55 PM

ADVERTISEMENT

பிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

மெட்டா நிறுவனத்தின் செயலியான இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் பக்கத்தில் 15 வினாடிகள் கொண்ட விடியோக்களை மட்டுமே பதிவிடும் வசதி இருந்து வந்தது. அதற்கு மேல் நேர அளவு கொண்ட விடியோக்கள் இன்னொரு ஸ்டோரியாக உருமாறி அதன் தொடர்ச்சியை தெரியப்படுத்தும்.

இந்நிலையில், சில பயனர்களுக்கு மட்டும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் 60 வினாடிகள் கொண்ட விடியோக்கள் வரை ஒரே பதிவாக இடுவதற்கு இன்ஸ்டாகிராம் அனுமதித்திருக்கிறது. இதனால் , ஒரு விடியோவின் தொடர்ச்சியை ஒரே ஸ்டோரியில் காண முடியும்.

மேலும், இனி வரும் நாள்களில் அனைத்துப் பயனர்களுக்கும் அந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | வங்கிக் கணக்கிலிருந்து பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு வரை- கிரிப்டோகரன்சி ஒரு பார்வை

ADVERTISEMENT
ADVERTISEMENT