புதன்கிழமை 26 ஜூன் 2019

வாட்ஸ் ஆப்பில் இனி யாருமே உங்களை குழுக்களில் சேர்க்க முடியாது!

Published: 05th March 2019 12:10 PM

வாட்ஸ் ஆப் இல்லாமல் ஸ்மார்ட் போன் இல்லை என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ் ஆப் நிறுவனமும் கால மாற்றத்துக்கேற்ப பல்வேறு சேவைகளை அமல்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முதலில் தனித்தனியாக இயங்கி வந்த வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள், பின்னர் குழுவாகச் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், தற்போது தனிநபர்களின் எண்ணிக்கையை விட, குழுக்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுகிறது. பள்ளி நண்பர்கள் குழு, கல்லூரி நண்பர்கள் குழு, அலுவலக நண்பர்கள் குழு என தினந்தோறும் புதிதாக தொடங்கப்படும் ஏராளமான குழுக்களில் இருந்து தப்பிக்க முடியாமல், குழுக்களில் பகிரப்படும் தகவல்களைச் சிலர் பார்ப்பதே இல்லை. சிலர் குழுக்களை மியூட் செய்துவிடுகின்றனர். ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரை புதிய குழுக்களில் சேர்க்கும் வசதி இருப்பதுதான் இதற்குக் காரணம்.

இந்தத் தொல்லையில் இருந்து வாடிக்கையாளர்களை விடுவிக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய சேவையை உருவாக்கியுள்ளது. எந்த ஒரு உறுப்பினரின் அனுமதி இல்லாமல் குழுவில் அவரை இணைக்க முடியாது என்பதுதான் இந்த புதிய சேவை, " வாட்ஸ் ஆப் பீட்டா'. இந்த சேவை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேவை அனைத்து வகையான வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, வாட்ஸ் ஆப் குழுவில் சேர மூன்றுவிதமான வழிமுறைகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அளித்துள்ளது. அதன்படி, முதலில், யார் வேண்டுமானாலும் உங்களை குழுக்களில் சேர்க்கலாம். இரண்டாவதாக, உங்கள் செல்லிடப்பேசியில் சேமிக்கப்பட்ட தொலைபேசி எண்களில் உள்ளவர்கள் மட்டுமே உங்களை குழுக்களில் சேர்க்கலாம். மூன்றாவதாக, யாருமே உங்களை குழுக்களில் சேர்க்க முடியாது. குழுக்களில் சேர்க்க அனுப்பப்படும் அழைப்பு 72 நேரத்துக்கு மேல் காலாவதியாகிவிடும்.
 - அ.சர்ஃப்ராஸ்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : whatsup smart phone samsung realme ஸ்மார்ட் ஃபோன் செல்ஃபோன் அலைபேசி

More from the section

நீங்க குரல் கொடுத்தா போதும், இந்த மெஷின் தானே காஃபி போட்டுத் தருமாம்!
சகலகலா ரோபோ இது! பெருமைப்படுகிறார் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்!
வாட்ஸ் அப் ‘பக்’ (விஷப் பூச்சி) உங்களை கடிக்காம பார்த்துக்குங்க!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பிளஸ், மைனஸ் என்ன? அவை வொர்த்தா இல்லையா?
அலர்ட்... ஸ்டபிலைஸர் தேவையில்லாத இன்வெர்ட்டர் ஏ சி பயன்படுத்துவோர் கவனத்துக்கு!