தொழில்நுட்பம்

விழுங்குவதில் சிக்கலா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய கருவி

23rd Dec 2019 04:08 PM

ADVERTISEMENT

 

விழுங்குவதில் சிக்கல் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக புதிய கருவி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழக(Purdue University) சுகாதார மற்றும் மனித அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் ஜியார்ஜியா ஏ மலன்ட்ராகி மற்றும் ஷி ஹ்வான் லீ ஆகியோர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். 

இதுகுறித்து பேராசிரியர்கள் கூறும்போது, 'விழுங்குதலில் பிரச்னை உள்ள மக்களுக்கு நம்பகமான மற்றும் நட்பு ரீதியான ஒரு சிகிச்சையை வழங்க விரும்பினோம். முன்னதாக இவர்களுக்கு உதவ பல கருவிகள் இருந்த போதிலும், அவை விலை உயர்வு என்பதால் மக்களுக்கு எளிதில் கிடைக்காமல் போனது. முக்கியமாக கிராமப்புற மக்களுக்கு பயன்படாமல் உள்ளது. இந்த ஆய்வுக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது.

ADVERTISEMENT

அதன்படி, மனிதனின் தோல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சென்சார் ஸ்டிக்கரை உருவாக்கியுள்ளோம். சாதாரணமாக கழுத்துப் பகுதியில் இதனை பொருத்திக்கொள்ளலாம். வயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர் மூலமாக இயங்கக்கூடியது. இந்த சென்சார் ஸ்டிக்கர், விழுங்குவதோடு தொடர்புடைய தசை செயல்பாடு மற்றும் இயக்கத்தை அளவிட்டு பதிவு செய்கிறது.

ஒரு விழுங்கலை வெற்றிகரமாக முடிக்க தலை மற்றும் கழுத்தின் 30க்கும் மேற்பட்ட ஜோடி தசைகள், ஆறு இணை தலை நரம்புகள் மற்றும் மூளை மற்றும் பல மூளைப் பகுதிகளில் சிக்கலான சுற்றுகள் ஆகியவை துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இந்தப் பாதைகளில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் விழுங்குவதில் கோளாறுகள் ஏற்படக்கூடும். எங்கள் சாதனம் தனித்துவமானது, குறிப்பாக விழுங்கும் நிகழ்வுகளுடன் தொடர்புடைய சிறிய மற்றும் சிக்கலான தசைகளுடன் சிறப்பாக செயல்பட இதை நாங்கள் உருவாக்கியுள்ளோம்' என்று கூறினர்.

சென்சார் ஸ்டிக்கர் நீட்டிப்புத் தன்மை கொண்டது, நெகிழ்வானது, அதே நேரத்தில் மலிவான கூறுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அப்புறப்படுத்துவதற்கு எளிதானது. சாதாரணமாக ஒரு கருவியை 10 முறை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : swallowing
ADVERTISEMENT
ADVERTISEMENT