ஸ்பெஷல்

உயிர்க்கொல்லி ஆகும் சுத்திகரிப்பட்ட உணவு

28th Feb 2021 04:27 PM | பேரா. சோ. மோகனா

ADVERTISEMENT

அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை உண்டால் விரைவில் மரணத்தை சந்திக்க நேரிடும் என புதிய ஆய்வு எச்சரிக்கிறது.

அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை (refined grains) உண்பதன் மூலம் மாரடைப்பு மற்றும் விரைவில் மரணம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

குறைந்த, நடுத்தர மற்றும் அதிக வருமானம் உள்ள நாடுகளில் வாழும் பல்வேறு இன மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பான தகவலை ஆய்வு செய்த சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தினர் பிப்ரவரி 19, 2021 அன்று பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். 

ADVERTISEMENT

சுத்திகரிப்பட்ட தானிய உணவால் இதய நோயும், பக்கவாதமும் சுத்திகரிக்கப்பட்ட மைதாவில் செய்த குரோசண்ட்ஸ்(croissants) என்ற ரொட்டி மற்றும் வெள்ளை ரொட்டி போன்ற அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட தானியங்களிலான உணவை உட்கொள்வது என்பது உயிருக்கு உலை வைக்கும் ஒரு செயல் என ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆபத்தான நோய்களான இருதய நோய், பக்கவாதம் மற்றும் இளவயது மரணம் என அதிக ஆபத்துடன் இதுதொடர்புடையது. SFU சுகாதார அறிவியல் பேராசிரியர் ஸ்காட் லியர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்களால் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு இது.  

உலகின் 16 ஆண்டு ஆராய்ச்சியும் அதிர்ச்சி தரும் முடிவும் 

வருங்கால நகர்ப்புற கிராமப்புற தொற்றுநோயியல் (PURE) ஆய்வு உலகெங்கிலும் உள்ள குறைந்த, நடுத்தர மற்றும் உயர் வருமான நாடுகளில் வாழும் பல்வேறு தரப்பட்ட மக்களிடமிருந்து உணவு முறைகளை அவர்களின் உடல்நலன் கருதி ஆய்வு செய்து வருகிறது. கனடா உட்பட 21 நாடுகளில் உள்ள 137,130 பங்கேற்பாளர்களின் உணவை 16 ஆண்டுகளுக்கும் மேலான பகுப்பாய்வு  செய்ததின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் சில ஆச்சரியமான கண்டுபிடிப்புகளை செய்துள்ளனர்.

அதாவது மக்கள் இப்போது நவீன உணவு முறையில் அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை உட்கொள்வதைக் கண்டறிந்தனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்தும்  சர்க்கரையின் அளவும் கூட  பல ஆண்டுகளாக பெரிதும் அதிகரித்துள்ளன.

அதிகமான சுத்திகரிப்பட்ட உணவும், சர்க்கரையும்

தானியங்கள் மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டன.

அவையாவன: சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், முழு தானியங்கள் மற்றும் வெள்ளை அரிசி.

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் சுத்திகரிக்கப்பட்ட (எ.கா. வெள்ளை) மாவுடன் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அடங்கும், இதில் வெள்ளை ரொட்டி, பாஸ்தா / நூடுல்ஸ், காலை உணவு தானியங்கள், கறியுடன் இணைக்கப்பட்ட கிராக்கர்ஸ் எனப்படும் உப்பு கலந்த பிஸ்கட்டுகள்  மற்றும் பேக்கரி பொருட்கள் / சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் கொண்ட இனிப்புகள் ஆகியவை அடங்கும். முழு தானியங்களில் முழு தானிய மாவுகளும் (எ.கா. பக்வீட் (buckwheat))எனப்படும் கொண்டைகடலை போன்ற பயறு) மற்றும் அப்படியே அல்லது விரிசல் நிறைந்த முழு தானியங்களும் (எ.கா. எஃகு வெட்டு ஓட்ஸ்) அடங்கும்.

சுத்திகரிக்கப்ட்ட தானிய உணவு ஒரு உயிர்க்கொல்லி

ஒரு நாளைக்கு ஏழுக்கும் மேற்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை வைத்திருப்பது இளவயது மரணம் 27% அதிகரிக்கிறது. இதனால் 33% இதய நோய் வருவதற்கான அதிக ஆபத்து ஏற்படுகிறது. மேலும் 47% பக்கவாதம் வரும் அதிக ஆபத்து உள்ளது எனவும் அனைத்து உயிர்க்கொல்லி நோய்களுடன் தொடர்புடையது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முந்தைய உணவு தொடர்பான ஆய்வை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, இது ஆரோக்கியமான உணவில் அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை கட்டுப்படுத்துவதைக் குறிக்கிறது என்று விஞ்ஞானி லியர் கூறுகிறார்.

முழு தானியம் & சிவப்பு/பழுப்பு அரிசியை உண்ணுங்கள்

முழு தானியங்கள் அல்லது வெள்ளை அரிசியை உட்கொள்வதால் குறிப்பிடத்தக்க பாதகமான சுகாதார விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. பழுப்பு அரிசி மற்றும் பார்லி போன்ற முழு தானிய உணவுகளை சாப்பிடுவதையும், குறைவான சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை பொருட்கள் உணவில் இருக்க வேண்டும் என இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் ஒட்டுமொத்த நுகர்வுகளைக் குறைப்பதும் மற்றும் சிறந்த தரமான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட உணவுகளை உட்கொள்ளுவதும்  உகந்த உடல் சுகாதார விளைவுகளுக்கு அவசியம் என்பதை இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது. 

Tags : lifestyle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT