புதன்கிழமை 22 மே 2019

பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் என்ன? திலகவதி ஐபிஎஸ் அதிர்ச்சித் தகவல்

By கார்த்திகா வாசுதேவன்| Published: 20th March 2019 03:11 PM

 

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் டாஸ்மாக் கடைகளே பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை மாதிரியான கொடூரங்களுக்கு அடிப்படை. மதுபோதை மற்றும் இதர போதை வஸ்துக்களின் பெருக்கமே பெண்களை விபரீதமாக அணுகும் தைரியத்தை ஆண்களுக்கு அளிக்கிறது. மதுக்கடைகளைத் தவிர்த்தாலே போதும் இம்மாதிரியான குற்றங்களைப் பெருமளவில் தவிர்த்து விடலாம் - என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான திலகவதி ஐபிஎஸ். பொள்ளாச்சி விவகாரத்தைப் பற்றிய அவருடைய கருத்துச் சீற்றத்தைக் காணொலியாகக் காண...

 

அதோடு பாலியல் வன்முறை விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களைத்தான் இந்த சமூகம் காலங்காலமாக விமர்சித்து குற்றவாளிகளாகக் கூனிக் குறுகச் செய்து கொண்டிருக்கிறது. எப்போதுமே குற்றம் செய்தவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் யாரும் இதை பாலியல் இச்சைக்காக செய்யவில்லை. நண்பன் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு திட்டமிட்டு தனித்து வரச் சொல்லி பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்தப் பெண்களை வக்கிரமான கேள்விகள் கேட்டு மேலும் கூனிக்குறுக வைப்பதை நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதையே முக்கியமாகக் கருத வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களிடம் குற்றமில்லை என நான் நம்புகிறேன். இதை அவர்களது குடும்பமும், நம் சமூகமும் நம்பவேண்டும்.

- என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும், எழுத்தாளரும், பதிப்பாளருமான திலகவதி ஐபிஎஸ்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : திலகவதி ஐபிஎஸ் பொள்ளாச்சி பாலியல் வன்முறை மதுபோதை Thilakavathi IPS POLLACHI SEXUAL ABUSE BAN TASMAC

More from the section

மொட்டைமாடியில் குடித்து கும்மாளமிட்டு உரண்டை இழுக்காதீர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆசிட் வீசி விடப் போகிறார்கள்!
‘வீட்டு உரிமையாளர் VS வாடகைதாரர்’ தீராப் பனிப்போர் நீங்க புதிய சட்டம் சொல்வது என்ன ?  
1000 டாட்டூக்களுடன் ஒரு அப்பா! ‘நான் வித்யாசமானவன் என்பதே எனக்குப் பெருமை’: மார்சலோ டிசோஸா!
அவர்கள் வெறும் 5000 க்கும் குறைவானவர்களே, ஆயினும் அரசு முடிவை எதிர்த்து திடமாய் வென்றிருக்கிறார்கள்!
பாகிஸ்தானின் ஏழை கிறிஸ்தவ இளம்பெண்களைக் குறிவைக்கும் சீன மணமகன்கள்!