வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கச் சென்று இன்று பழவந்தாங்கலில் இட்லி விற்கும் மாணவியின் சோகம்!

By RKV| Published: 03rd December 2018 03:44 PM

 

சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி கிருபாவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் சென்று மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. மாணவிக்கு மருத்துவப் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்த சமயத்தில் அவர்களது குடும்பநிலை மருத்துவக் கட்டணம் செலுத்தும் நிலையில் இருந்ததால் முதற்கட்டமாக 8 லட்ச ரூபாய் செலுத்தி மருத்துவப் படிப்பில் இணைந்திருக்கிறார் கிருபா. பிலிப்பைன்ஸில் மருத்துவம் பயில முதலாண்டை புனேயில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் முடித்து விட்டு வரவேண்டும் என்று நிபந்தனை இருந்ததால் புனேவில் முதலாண்டுப் படிப்பை முடித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் விதி விளையாடி கிருபாவின் தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து மருத்துவப் படிப்புக்கு கட்டணம் செலுத்த வழியில்லாது போயிருக்கிறது. மருத்துவக் கல்லூரி அளித்திருந்த காலக்கெடு தாண்டியும் கட்டணம் செலுத்த வகையற்றுத் திகைத்த கிருபா தனது மருத்துவப் படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு தற்போது தொழில் நொடித்ததால் தெருவோரத்தில் இட்லிக் கடை வைத்து நடத்தி வரும் தன் அம்மாவுடன் இட்லி விற்பனை செய்து வரும் காட்சி அப்பகுதி மக்களின் வருத்தத்திற்குரிய செய்தியாக உலா வந்து கொண்டிருக்கிறது.

சைக்கிளில் டீ விற்கும் அப்பா, குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் செல்லும் முதல் தங்கை, பள்ளியில் படித்து வரும் இரண்டாவது தங்கை, தெருவோர இட்லிக் கடை நடத்தும் அம்மா என இன்று கிருபாவின் குடும்பம் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அன்றாட குடும்பப் பாட்டுக்கே கஷ்ட ஜீவனமாயிருக்கிற இந்த சந்தர்பத்தில் கிருபாவின் மருத்துவப் படிப்புக்கு எங்கிருந்து கட்டணம் செலுத்த முடியும்? என கண்ணீர் வடிக்கிறார் கிருபாவின் தாயார்.

Tags : philippines to pazavanthangal road side idly vendor medicine to idly shop worker medicine student kruba ப்லிப்பைன்ஸ் டு பழவந்தாங்கல் மருத்துவம் டு தெருவோர இட்லிக் கடை

More from the section

ஆபத்து, நெருக்கடின்னா இனி இது தான்... புதிய எமர்ஜென்சி ஹெல்ப்லைன் எண் 112 குறித்து சில தகவல்கள்...
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சும்மா விட்டுவிடுவார்களா? சபாஷ் சரியான தண்டனை!
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... இது நெறிமீறல்! (விடியோ)
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்கார வேலரைத் தெரியுமா உங்களுக்கு?!
பெற்ற தாயே மகளை விற்கத் துணிந்த கொடுமை! புடம் போட்ட தங்கமாய் மீண்டு சமூகசேவையில் வெற்றி நடைபோடும் மகள்!